உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறு குழந்தையைப் போன்றது. அது பக்கத்தில் இருப்பதால் பெரியதாகக் காணப்படுகிறது. கிரகங்களுக்கும். நட்சத்திரங்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் நட்சத்திரம் விட்டுவிட்டு ஒளிவீசும்: கிரகம் விட்டுவிட்டு ஒளிவீசாது. சூரியனின் வெளிச்சத்தைப் பெறுவதால்தான் கிரகங்கள் ஒளி வீசுகின்றன.

சூரியனின் ஒளியைத்தான் கிரகங்களிடமிருந்தும் சந்திரனிடமிருந்தும் பெறுவதை அனைவரும் காண்கின்றோம். ஆனால் நட்சத்திரங்கள் சூரியனைப் போன்றவை: அதனால் அவைகள் எல்லாம் தாமாகவே ஒளிவீசுகின்றன. மேலும் அவைகள் வெப்பமாக இருக்கின்ற காரணத்தினால் கொழுந்துவிட்டு எரிகின்றன. சூரியனும் ஒரு நட்சத்திரம் போன்றது. அது அருகிலிருப்பதால் பெரிய நெருப்புப் பந்து போலத் தோன்றுகிறது. சூரியன் கோடானுகோடி மைல்களுக்கு அப்பால் மிகத் தொலைவில் இருக்கிறது. மற்ற நட்சத்திரங்கள் அதைவிட இன்னும் அதிகத் தொலைவில் இருக்கின்றன. நட்சத்திரங்களின் இயல்பை அறிந்த வான நூல் வல்லோர் நீண்ட காலத்திற்கு முன்பு பூமியும் மற்றக் கிரகங்களும் சூரியனோடு சேர்ந்து இருந்தன என்கின்றனர். சூரியனிடமிருந்து சிறிய நெருப்புத் துண்டுகள் பொறிகள் போல் பிரிந்து வானில் பறந்தன. ஆனால் அவை தனது தந்தையான சூரியனை விட்டுப் பிரிந்து போகாமல் இருந்தன. ஏதோ ஒரு கயிற்றால் கட்டப்பட்டவை போல் சூரியனைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. கயிற்றைப் போன்ற இவ்விசித்திரமான விசையானது பழுவுள்ள பொருள்களை இழுக்கும் தன்மையுடையது. நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் எல்லாவற்றையும்விட இந்த உலகமே பெரிது அதனால்தான் இது நம்மிடமுள்ள எல்லாவற்றையும் தன்னிடம் இழுத்துக் கொள்கிறது.

பூமியும் சூரியனிடமிருந்து சிதறிய பகுதியாகும் அப்போது அது அதிக வெப்பமுடையதாக இருந்திருக்கும். வெப்பமான ஆவியும் காற்றும் அதைச் சூழ்ந்து கொண்டிருந்தன. சூரியனைவிட மிகச் சிறியதான இப்பூமி விரைவில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியடைந்தது. சூரியனின் வெப்பங்கூட முன் இருந்ததைவிட இப்போது குறைந்து வருகிறது. அது குளிர்ச்சியடைய அனேக கோடி ஆண்டுகள் ஆகும். பூமியின் சூடு மெள்ள மெள்ளத் தணிந்து பூமியின் மேல்பகுதி குளிர்ச்சியடைந்தது. பூமியின் உட்புறம் அதிக வெப்பமாக இருந்தது. இப்போதும் நிலக்கரிச் சுரங்கத்தில் இறங்கிச் சென்றால் கீழே போகப் போக வெப்பம் அதிகரிப்பதை உணரமுடிகிறது.

இந்திய நாட்டின் கடற்கரையைப் போலவே அதன் மலைத்தொடர்களும் நீளமானவைகளாகும். பரந்த உள்நாட்டுப் பகுதியும். வெப்ப மண்டலங்களும். குறைவெப்பப் பகுதிகளும், தட்பப்பகுதிகளும் இந்நாட்டில் ஒருங்கே அமைந்துள்ளன. அடர்ந்த காடுகளும் மிக நீண்ட சமவெளிகளும், பரந்த பாலை நிலங்களும், கடல்களும் அமைந்துள்ள இந்திய நாட்டில் பல்வேறு வகையான இயற்கை வண்ணங்களும் மக்களும் அமைந்திருப்பது இயல்பேயாகும். எனவே இந்நாட்டு வரலாற்றை ஒரேமாதிரியான இயற்கையின் அடிப்படையில் உண்டான வரலாறு எனக் கூறுவதற்கில்லை, பலதரப்பட்ட இதன் தட்பவெப்பத்திற்கும் இயற்கை அமைப்புகளுக்கும் ஏற்றவாறே இதன் வரலாறும் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறியமுடிகிறது.

காகிதச்சுவடி ஆய்வுகள்

255