உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அதைப் பனியுகம் என்றனர் வடதுருவத்தில் தற்காலத்தில் காணப்படும் பனியாறுகள் முன்பு இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் பரவியிருந்தன. அதனால் மக்கள் அதிகத் துன்பத்துடன் அப்போது வாழ்ந்திருக்கின்றனர். பண்டைக்கால மனிதனை 'ஹீடல்பர்க் மனிதன் என்றழைக்கின்றார் ஜெனிவாவில் ஹீடல்பர்க்கிற்கு அருகில் மண்ணில் புதைந்து ஒரு மண்டையோடு எடுக்கப்பட்டது. அது ஆதி மனிதன் மண்டையோடு என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்

பஞ்சாபும் ஐக்கிய மாகாணத்தில் சில இடங்களும் கடலாக இருந்திருக்கின்றன. தென்னிந்தியாவும் மத்திய இந்தியாவும் இமயமலைப் பகுதியிலிருந்து ஒரு கடலால் பிரிக்கப்பட்டு அவை எல்லாம் ஒரு தீவாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது உறைபனி ஐரோப்பா ஆசியாக் கண்டங்களிலிருந்து மறைந்த பின்னர் வெப்பம் உண்டானதால் மக்கள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று குகைகளில் குடியேறினர் கல் ஊசிகளும் கூர்மையான கருவிகளுமே அவர்களிடம் இருந்தன. இவற்றைக் கொண்டு குகைகளின் சுவர்களில் அவர்கள் விலங்குகளின் உருவங்களைக் கீறி வரைந்தனர். அவர்கள் எழுதியுள்ள சித்திரங்கள் மிக அழகாக இருக்கின்றன. நேரு இந்திராவுக்குக் கடிதம் எழுதும் பொழுதே கற்கால மனிதர்களின் சித்திரங்களைப் படம் பிடித்து அனுப்பியுள்ளார்.

அக்கால மக்கள் கல்லினால் செய்த கருவிகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்ததால் அவர்கள் காலத்திற்குப் பழைய கற்காலம் என்று பெயர். உலகத்தின் சீதோஷ்ண நிலையானது பெரிதும் மாறி வெப்பம் அதிகரித்தது மத்திய ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பெரிய காடுகள் உண்டாயின. இக்காடுகளில் ஒரு புது ஜாதி மனிதர்கள் வாழ்ந்தனர். முன்புள்ள பழைய கற்கால மக்களைவிட இவர்கள் அறிவு உள்ளவர்களாகக் காணப்பட்டனர். இவர்கள் வாழ்ந்த காலம் பின் கற்காலம் அல்லது பெருங்கற்காலம் என்று கூறப்படுகிறது.

பெருங்கற்காலத்து மக்கள் விலங்குகளின் தோலையும். சணல் செடியின் நாரினால் செய்த கரடுமுரடான துணியையும் அணிந்து கொண்டனர். ஜெனிவார் காட்சிச்சாலையில். ஏரி நடுவே கட்டப்பட்ட வீட்டின் அழகிய சிறு மாதிரிக் கட்டிடம் ஒன்று இருந்ததாகக் கூறப்படுகிறது. ஏரியின் நடுவே மரத்தின் கால்களை ஊன்றி அவற்றின் குறுக்கே மரத்தினால் மேடை செய்து அதன்மீது வீடு கட்டப்பட்டிருக்கிறது. அந்த வீட்டிற்குச் செல்ல ஏரியின் நடுவே ஒரு பாலம் போடப்பட்டிருக்கிறது இவர்கள் தாமிரத்திலும். வெண்கலத்திலும் கருவிகள் செய்யத் தொடங்கினர். தாமிரமும் தகரமும் சேர்ந்தால் வெண்கலமாகிறது. தங்கத்தையும் பயன்படுத்தினர். இவர்கள் காலத்தின் இறுதியில் மக்களுக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் நீரில் மூழ்கி அனைவரும் இறந்திருக்கலாம் என்று கிறிஸ்தவர்களின் வேதாகமத்திலிருந்தும் சமஸ்கிருதப் புத்தகங்களிலிருந்தும் மகாப் பிரளயம் ஏற்பட்டது பற்றிக் கூறுவதன் மூலம் இம்மக்கள் இனம் எவ்வாறு அழிந்தது என்பது தெரியவருகிறது.

இனங்கள் மற்றும் மொழிகள் தொடர்பான செய்திகள்

இந்தியாவில் முதன் முதலில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள். பிற்காலத்தில் ஆரியர்களும் கிழக்கேயிருந்து மங்கோலியர்களும் வந்தார்கள். இப்பொழுதுங்கூடத் தமிழ்நாட்டில் வசிப்போரில் பெரும்பாலோர் திராவிடர்களின் சந்ததிகளேயாவர் காகிதச்சுவடி ஆய்வுகள்

257