உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என்று பல்தசார் டா கோஷ்டா இலத்தீன் மொழிபெயர்ப்பில் கூறுகிறார். இவ் வேண்டுகோளாவது•

"தமிழிலும், தெலுங்கிலும், கிரந்தத்திலும் (சமஸ்கிருதம்) நான் எழுதினவெல்லாம் நம் தூய அன்னை கத்தோலிக்க உரோமன் திருச்சபைக் கருத்துப்படி இருக்க வேண்டும் என்பது என் விருப்பம் தப்பாகவோ தவறாகவோ புண்படுத்தக்கூடிய முறையிலோ ஏதாவது மறந்து நான் விட்டிருந்தால் அதைத் திருத்தும்படி அவளை (மரியாளை) மன்றாடுகிறேன். இவ்வேண்டுகோளை ஒவ்வொரு சுவடியிலும் சேர்க்கும்படி, இந்நூல்களைப் படி செய்வோரையும் மொழி பெயர்ப்போரையும் மிக உருக்கமாக மன்றாடுகின்றேன்.

சான்.தோமே. 6 சனவரி 165630

முடிவுரை

இவ்வாறாகத் தத்துவ போதகர் இராபர்ட் தே நொபிலி அடிகளாரின் திருமுகங்கள் வாயிலாக, மதுரை நகரச் சிறப்பு. இந்தியப் பண்பாட்டுச் சிறப்பு. கல்விநிலை. வேதாந்தத் தத்துவத்தின் சிறப்பு. சமயநிலை என்பவற்றை அறிந்து கொள்வதுடன், அவரைப் பற்றிப் பிறர் எழுதிய கடிதங்கள் வாயிலாக அவரின் தனிச்சிறப்பினையும் அறியமுடிகிறது. இவரின் கடிதங்கள் தற்பொழுது பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகமெங்கும் அவர் கருத்துக்கள் பரவி வருகின்றன.

குறிப்புக்கள்

1. நொபிலி. மாநில சமய அதிபர்களுக்கு எழுதிய மடல்.

2

3.

4.

5.

6

7

8.

9.

10.

தனராசு, தத்துவ போதகரின் சமயப்பணி, திருச்சி.

Diccimila Student Bramani - Laerzio 8-12-1610.

Quoted in J.I. Miranda, Fr. Robert de Nobilis Mission.

A Proanca Statement.

தொன் பிரான்சிஸ்ராஸ், அக்குவாவீலா சுவாமிக்கு எழுதிய கடிதம். சுவாமி 19. கோஸ்டா 1644இல் எழுதிய கடிதம்.

மேலது. சேசு சபைத் தலைவருக்கு எழுதிய மடல். 1644.

அந்துவாம் பிரயோன்சா (1656) மடல்

Fr. Balthasan da Costa S.J. Companion of Fr. De Nobili wrote these epigrams in Latin in his introduction to his translation of De Nobili Catechism. Fr. F. Gilmore has kindly rendered those epigrams in to English.

428

காகிதச்சுவடி ஆய்வுகள்