4
காமராசர் ஒரு முறை என்னிடமே கேட்டார், “ஒரு 5 இலட்சம் ரூபாய் செலவிட்டால் உன்னை தோற்கடிக்க முடியாதா?” என்று. அதை அவர் இப்போது செய்து காட்டினார்.
பிரசவ வேதனையுறும் தாய்மார்கள் சிலர் குழந்தைகளைப் பெற்றவுடன் உயிர் துறந்து விடுவார்கள். அதே போல், நாங்கள் 11 பேர் தோற்று விட்டோம்; ஆனால் 50 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம்.
எங்களைத் தோற்கடிக்க செலவிட்டப்பணம்
5 இலட்சம் அல்ல கணக்கில்லா லட்சங்களைச் செலவழித்திருக்கிறார்கள்; அதனால் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்! இப்படிப் பெற்றுள்ள வெற்றி எதிர்க்கட்சித் தலைவர்களை பெரும் பணம் செலவிட்டுத் தோற்கடித்துள்ள நிகழ்ச்சி சன நாயகத்துக்கு அழகல்ல!!
பணநாயகம் வென்றது
தேர்தலில் ஏன் தோற்றோம் என்பதற்கு ஆயிரத்தெட்டு காரணங்களைக் காட்டலாம்; அவை வாதத்திற்காகவும் பயன்படக் கூடும்; சில உண்மையாகவும் இருக்கலாம்; சில உதவாதவைகளாகவும் இருக்கலாம். இன்னும் சில நம்புதற்கே ஆச்சர்யமானதாகவும் இருக்கலாம்.
எங்களை என்ன சாமான்யர்களா எதிர்த்தார்கள்? என்னையும், சண்முகத்தையும், சத்தியவாணி முத்துவையும், அன்பழகனையும், கோவிந்தசாமியையும், சாரதியையும் தோற்கடித்தது பணத்தைச் செலவு செய்துதான்! தில்லு முல்லுகளைக் கையாண்டு தான் வெற்றிபெற முடிந்தது அவர்களால்! இப்படிப் பணத்தைச் செலவிட்டு எத்தனை முறை வெற்றி பெற்றுவிட முடியும் ? அடுத்த தேர்தலில்,
படை பலம்
தில்லுமுல்லுகள்
ஆகியவைகளைக்கொண்டு எங்களை நிச்சயமாக வெற்றி பெற இயலாது!