பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xii


என் வாழ்நாளின் இறுதிக் காலப் பகுதியில் (அகவை 89ஐ கடந்த நிலை) இந்த நூல் வரைவதற்குரிய சிந்தனையையும், எழுதுங்கால் நல்ல உடல், உள நலங்களையும் கூரிய கண்ணொளியையும் நல்கிவரும் என்னுள்ளே நிலையாக எழுந்தருளியிருக்கும் அல்லிக்கேணி அச்சுதனை வாழ்த்தி வேதவல்லித் தாயாரின்மூலம் எண்ணற்ற சரணாகதி வணக்கங்கள்.


முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை,
       மூவா மூவுலகும் கடந்து,அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆரமுதை, அரங்கம் மேய
       அந்தணனை, அந்தணர்தம் சிந்தை யானை
விளக்கொளியை, மரகதத்தைத் திருத்தண் காவில்
       வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
'வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக!’ என்று
       மடக்கிளியைக் கைகூப்பி வணங்கி னாளே”

- திருமங்கையாழ்வார்


வேங்கடம் AD-13-14, அண்ணா நகர் ந. சுப்பு ரெட்டியார்
சென்னை - 600 040.
26211583
31.10.2004


 



3. திருநெடுந் - 14