பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்க்கையும் மேற்கல்வியும் பிறவும் 15 வடநாட்டுத் திருத்தலப் பயணம் : நம் சுவாமி திருத்தலப் பயணம் மேற்கொள்ளும் போது தனியொரு வராகச் செல்லும் வழக்கம் இல்லை. மிகப் பெரிய குழுவுடன்தான் செல்வார். ஆங்காங்குள்ள சீடர் குழாம் செலவினை ஏற்றுக் கொள்ளும், 23 முறை ரிஷிகேசம் வரை பயணமும், ஏழு முறை பஞ்ச துவாராகப் பயணமும், மூன்று முறை பதவியாச்சிரமப் பயணமும் மேற் கொண்டுள்ளார். சாளக்கிராமப் பயணம் மட்டிலும் வாய்க்க எம்பெருமான் திருவருள் இல்லை. ஒரு முறை நேபாளத்திலிருந்து வந்த மஹந்த் (வடநாட்டுத் துறவியின் பெயர்) ஒருவர் சாளக்கிராமப் பயணத்திற்குத் தாமே ஏற்பாடுகள் செய்வதாகவும் சுவாமி தட்டாமல் எழுந்தருள வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார்; சுவாமியும் இசைவு தெரிவித்தார். இரண்டு மூன்று நாட்களில் புறப்படவேண்டிய நிலை. ஆனால் அதற்குள் வாரணாசியில் சப்ரா என்னும் இடத்தில் சுவாமியின் ஆசாரியரான காதி சுவாமி பரமபதித்து விடவே அங்குச் செல்ல நேர்ந்து விட்டது. அதனால் சாளக்கிராமப் பயணம் நின்று விட்டது. சுவாமியின் மணிவிழா : இது 1951-ஆம் ஆண்டு சுவாமிக்கு நடைபெற்றது. இதனைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்குப் பிரமுகர்கள் பலர் கூடி செயற்குழு ஒன்று அமைத்தனர். முதலில் 17.3.1951 முதல் 27.3.1951 வரை (10 நாட்கள்) அதாவது பங்குனி விசாகம் முடிவாக சுவாமியின் திருமாளிகையில் திவ்வியப் பிரபந்த, வேதபாராயண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சற்றேறக் குறைய 200 சுவாமிகள் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டினர். 9. அகவை 60-இல் வருவது (Diamond Jubilee) 70-இல் வருவது Googy sopm; 7.5-9so sugag, Laser asps (Platinum Jubilee); 81-இல் வருவது சதாபிஷேகம் பெருமங்கலப் பெருவிழா என்றும் இதனை வழங்குவர்; 25-இல் வருவது வெள்ளி விழா (Silver Juhlee) ; 50-43so suojag Gh Imair aspir (Golden Jubilee).