பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

காஞ்சி வாழ்க்கை


 பினை நிறைவேற்றிக்கொண்டே-படிக்க வாய்ப்பு உண்டு என்றார். சிதம்பரத்துக்குப் பக்கத்தில் உள்ள கல்லூரியில் தேர்வு எழுதலாம் என்றும், அதற்கு வீட்டில் இருந்து கொண்டே படிக்கலாம் என்றும் சொன்னர். தமிழ் வித்துவான் பட்டம் பெற மேலே படிக்க வாய்ப்பு உண்டு என்றார், அதற்கு முதலாக நுழைவுத் தேர்வுக்கு உரிய நூல் பெற்று அப்போதே படிக்கத் தொடங்கலாம் என்றார், 'மீனாட்சி காலேஜ்' என்று இருந்தது பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகமாக மாறியுள்ளதென்றும் அதற்கு எழுதினால் எல்லாத் தகவல்களும் அனுப்புவார்களென்றும் அவர் சொன்னர். தேவையானால், சிதம்பரத்தில் தங்க வேண்டுமானல், தாம் நிலையாக உள்ள மெளன. சுவாமிகள் மடத்தில் தங்கலாம் என்றும் வழி காட்டினர். எதற்கும் இசையாத என் அன்னையார், நான் வீட்டிலேயே இருந்து படிக்க வாய்ப்பு உண்டு என்று சொன்ன காரணத்தால், அந்த வித்துவான் நுழைவுத் தேர்வு எழுத இசைவு தந்தார்கள். நானும் உரிய நூல்களைப் பெற்றுப் படிக்கத் தொடங்கினேன்.

என்னுடை தமிழ்ப் படிப்பு தொடங்கிவிட்டது. ஆட் கொள்ள வந்த வள்ளலாம் 'பிரகாச ஆனந்தர்’ என்னைத் திசைமாறச் செய்தார், ஆம்! அந்த மாற்றமே இன்று என்னை ஒரளவு தமிழ் அறிந்தவகை உலகுக்குக் காட்டுகிறது. அன்னைத் தமிழுக்கு நான் ஆக்கப்பணி செய்கிறேனோ இல்லையோ, அத்தமிழ் என் ஆக்க வாழ்வைச் சிறக்கச் செய்கிறது. எனது முந்திய பாதை வழியே சென்றிருந்திருப்பேனாயின் ஒருவேளை நான் தற்போது எங்கேனும் பொறியாளனாகப் பணியாற்றிக் கொண்டிருந்திருப்பேன். அத்துறையில் உயர் வெய்தியிருப்பேனோ-அன்றி தாழ்நிலையில் இருந்திருப்பேனோ? ஆனால் என் அன்னைத் தமிழ் உலகுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தது. பிரகாசானந்த அடிகள், அன்னையின் மனம் நோகாவண்ணம், வீட்டிலேயே இருந்து படிக்கலாம் என்று கூறினார். ஆயினும், நுழைவுத் தேர்