பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

* {} 6

என்ன ஆச்சரியம்!

ராமையாத் தேவருக்குக் கூடப் புன்னகை புரிய வாய் இருக்கிறதே? மூச்சுக் காட்டாமல், மகுடிக்குக் கட்டுப்படாமல் தப்ப முடியாத கருநாகம் போலே, வீரமணியைப் பின் பற்றித் தொடர்ந்தார்! - யார்? -திருமிகு ராமையாத் தேவர்!

திண்ணே பரபரப்பு அடைந்தது.

பஞ்சநதம் அமைதி செழிக்கச் சிரித்தார். "ஊம்; மாப்பிள்ளை கூப்பிட்டுத்தான் மாமன்காரர். வரவேணும்னு இருந்திருக்குது. சரி,சரி. ராமையாத் தேவரே, வெட்கப்படாது நல்லாக் குந்திக்கங்க,' என்ருர், வெற்றிலைத் தட்டை அவர் பக்கம்

நகர்த்தி விட்டார்.

வீரமணி எதிர்த் திண்ணையில் உட்கார்ந்தான். அவன் முகம் தெளிவோடு விளங்கியது.

} ஆதிமூலத் தேவர் குரலைப் பான்மையோடு சீராக்கிக் கொண்டு, வேறே யாரும் வரணுமா? சேரி ஈவுக்கு யாரையும் கண்ணுப்புறத்திலே காணுேமே?' என்று நினைவு கூர்ந்து நினைவு -ஊட்டினர்.

'நல்லவேளை, மூத்தவுக ஞாபகப்படுத்திளுங்க. எலே சன்னசி, இன்னொரு நடை சேரிக்கு ஓடி, சாம்பானைக் கையோட இட்டுக்கிட்டு வா, என்று. ஆணையிட்டார் தலைவர். -