பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

F 1 0

'நானு ஐம்பது ரூவா குடுத்துப்பிட்றேனுங்க, சாமிகளே! விரலுக்கு தக்கதுதாங்க வீக்கம்! " என்ருன் சாம்பான்-மெலிந்தவன்!

கூடியிருந்தோரை வாஞ்சையுடன் பார்த்தார் ஊராட்சி மன்றத் தலைவர். நீங்க எல்லாரும் உங்க உங்களோட சக்திக்கு உகந்தபடியும் இஷ்ட பிரகாரமும் நன்கொடை போட்டிருக்கீங்க. என் சொந்த முறைமையிலே உங்களுக்கு நன்றி சொல் லிக்கிடுறேன்; என்ைேட பங்கு தான் இனி தொடுசு நிற்குது. என் சூழ்நிலைக்கு ஒத்து, நான் ஐந்நூறு ரூபாய் போட்டுக்கிறேன்!” என்று தெரியப்படுத்தி ஞர். தொகையை நோட்டிலும் எழுதினர். "ஆவணி பிறந்தானதும், நீங்க சாடா பேரும் சொன்ன சொல்படி அன்பளிப்புத் தொகையைத் தவருமல் கொடுத்துப்புட வேணும். நானும் கச்சிதமாய்த் தந் திடுவேன். இன்னென்ணையும் விளம்ப வேணும். வசூலாகக் கூடிய நன்கொடைப் பணத்தை உண்டிப் பெட்டியிலே போட்டுப் பூட்டிச் சாவியோடே நம் பெரியவங்க ஆவன்ன-தீன கையிலே ஒப்படைச்சி வைப்போம். இந்த லாயக்கான ஏற்பாடு உங்க எல்லாருக்கும் உடன்பாடு தானுங்களே?' என்று அவர்களை விசாரித்தார் பஞ்சநதம்.

ராமையாத் தேவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வெளிப்படையான நிறைவுடன் தலையை அசைத்து, சரி சொல்விச் சம்மதம் கொடுத்தார்

& ©YᎢ . :

ஆனல், ராமையாத் தேவர் மறுப்பு எதுவும் சொல்லாமல், மெளனப் பிண்டமாக நகர்ந்து தன்