பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

146

நீதியாய் ஒப்படைச்சாக வேணும். எனக்கிண்ணு ஒரு குடும்ப வாழ்க்கை லவிக்க வேணும்னு விதிச் கிருந்தால், அந்தப் பாக்கியம் நீங்க எனக்கு இடுற அன்புப் பிச்சையினுவேதாங்க கிட்ட முடியும்!... இந்த விதியை எப்பேர்ப்படட சோதனையிலேயும் நான் சத்தியமாய் மறந்துப்புட மாட்டேன்!... அதே கணக்கிலே, நீங்களும் மறந்துப்புடாதீங்க, அயித்தை மகனே!-சத்தியமும் தருமமும் இதய ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன!... அம்மான் மகளே!...அன்னம்! - உந்திக் கமலத்தினின்றும் வெளிக் கிளம்பிய குறுநகை அவனுடைய செவ்வத ரங்களில் முகம் பார்த்தது: அகம் பார்த்தது. நேத் திரங்கள் சுடு நீர்கண்டன. வெய்யில் களிரென்றது.

வழியை மறித்து விலகிவந்த தெரு நாயொன்று தொட்டித் தண்ணிரை எட்டி எட்டிநக்கிக் கொண் டிருந்தது. நன்றியை உணர உணர, வால் குழைந்து கொண்டேயிருந்தது.

தேவர் பாய்ச்சல் காளையாகப் பாய்ந்து, சிச்சி, தாயே! என்று அதட்டி அதை விரட்டினர். காலடி யில் சிந்திக்கிடந்த சாணத்தை இரு கைகளாலும் அள்ளி எருக்கிடங்கில் வீசினர். துவாலே வழுவியது: கட்டுக் குடுமி மட்டிலும் கட்டுக்கு அடங்கி விட்டி ருந்தது.

. முண்டாசுத் தலையும் மண்வெட்டித் தோளு மாக நின்ற வீரமணி, நழுவிக்கிடந்த துவாலையைத் தலைவணங்கி எடுத்து அதைத் தன் தந்தையிடம் அடிரிக்கையோடு ஒப்படைத்தான். .