பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

J 58

பொன்னும் மணியும் கொட்டிக் கொட்டி அளந்து சுொட்டினல் கூட, ஈடாக மாட்டாதே! அந்தப் புன்னகையை பட்டிா போட்டு உடைமைப் படுத்திக் கொள்ள எந்தச் சத்தியச் சோதனையையும் அக்கினிச் சோதனையாகச் சந்திக்கத் தவம் இயற்றிக் கொண்டே இருக்கலாமே!-அவன் மெய்ம் மறந்தான்; மெய் சிலிர்க்க, மெய் உணர்ந் தான். அப்பாவின் திட்டத்தை அன்னக்கொடி எப்படி அறிவாள்? - அம்மான் மகளே!...என் அன்னக்கொடியே!... --கண்கள் பொடித்தன. திடுக்கிட்டான். அந்த வைரச் சிமிக்கிகளின் ஒயில் ஆட்டத்தைத்தான் அவனுல் அப்போது இறுதியாக தரிசிக்க முடிந்தது! இன்னும் கொஞ்ச நாழிகை யாவது, புன்னகைச் சாதி மல்லிப் பூவைத் துளவி, கனவு காட்டிக் கனவு கூட்டித் தரிசனம் தந்திருக்க லாகாதா, அம்மான் மகளே!... தவித்தான் வீரமணி.

'இனிமே பறியலாமுங்களா, அண்ணுச்சி?”

'ஊம்!...அடடே, என்னமோ இரைச்சல் திமிலோகப்படுதே? என்னவாம் சங்கதி? சரி, சரி. அந்தக் கூத்தை நின்னுதான் பாக்க்கலாமே!'

'ஆகட்டுமுங்க!” .

தோழர்கள் புளிய மர நிழலில் ஒண்டினர்கள்.

அந்த ஏழைக்கு அழத் தெரியும்போது, அந்த ஏழை அழுத கண்ணிருக்குப் பேசவும் தெரிவது சட்ட விரோதம் அல்லதான்! -பேச்சில் ரத்தம் தெறித்தது: