பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183

#83

பெருகத் தொடங்கியது. தன்னுடைய கண்ணீரைத் தன் மைந்தன் கண்டு விடக்கூடாதே என்ற பதம். டத்தில், அவசரம் அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டார் முதியவர்.

இக்காட்சியை வீரமணி கண்டான், ரசித்தான்; சிரித்தான். அப்பா ! என்று என்னவோ சொல்ல வாயெடுத்தான். அப்போது, திட்டி வாசலினின்றும் பரிதாபமாக எதிரொலிக்கத் தொடங்கிய ராமையாத்தேவரின் வெள்ளேக் காளே எழுப்பிய சோகக்குரல் அவனுடைய உள்ளத்தில் மட்டுமல்ல, உடலிலும் கூட ஏதோவொரு புதிய மாற்றத்தை உண்டு பண்ணிய விசித்திரத்தை அவனுல் தட்டிக் கழித்திட முடியவில்லை. வாயில்லாச் சீவனின் தாபக் குரல் அவனே அவனது அம்மான் மகளிடம் இட்டுச் சென்றிருக்கலாம். இதயத்தின் அந்தரங்கத்தில் நிலைப்பாக ஊற்றெடுத்துக் கொண்டிருந்த ஆன்டி நேயத்தின் புதுமைப் பெண்ணுக-புரட்சித் தமிழச் சியாக அப்போது அவனுக்குரிய அம்மான் மகள் அன்னக்கொடி அழகு காட்டியிருக்கலாம்: .

நாட்டாண்மைக்காரர் இந்த ஆவணத்தான் கோட்டைக் குடியிருப்பைப் பொறுத்த மட்டில், மட்டில்லாப் பெருமையைச் சேர்த்து வைத்துக் கொண்டிருந்தார் என்பது பொய்யல்ல. ஆனாலும், வெறும் பெருமை மர்த்திரம் ஒரு சமுதாயத்தில் தலே உயர்த்தி நடக்கப் பற்றுவதில்லை. மனிதப் பிண்டத்துக்கு யதார்த்தமான பெருமை ஏற்பட வேண்டுமேயானல், பணம் காசுதான் முதல்படியாக