பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223

233

சுழலிலே அகப்பட்டுக் கொண்டு மீள முடியாமல். வழி புரியாமல் தட்டுத் தடுமாறுவதுபோல அவன் தவித்தான்; தடுமாறினன். அன்னத்தின் கண்கள் ஏன் அப்படிக் கலங்குகின்றன? "அன்னம்!' என்று கூப்பிட்டான். அவளிடம் தோன்றிய சுடுநீர்

அவனிடமும் மடை மாறிப் பாய்ந்ததில் வியப்பு

இல்லைதான்! அம்மான் மகளே, ஏன் கண் கலங் குறே?' என்று தழுதழுப்புடன் கேட்கலானுன்

அவiன.

கலக்கத்தைத் திரைபோட்டு மறைக்க முயற்சி செய்து-மறைக்கப்பாடுபட்டுத் தோற்ற நிலையில் அவள் தன்னுடைய அத்தானே நிமிர்ந்து நோக்கி ஞள் என்ன அத்தான், இப்படிக் கேட்கிறீங்களே: பசிக்குதின்னு சொன்னுல், ஏன் பசிக்கிதுன்னு கேள்வி கேட்டால், என்ன பதிலைச் சொல்ல. முடியுமுங்க?’ என்ருள்.

வீரமணி பெருமூச்சு விட்டான்; அம்மான் பெற்ற அருமைத் தவமகளை இப்பொழுதுதான் நேருக்கு நேராக முதல் தரமாகப் பார்ப்பவன் மாதிரி அதிசயத்துடன் பார்த்து நின்ற அவனுக்கு, அவளது பார்வையின் சலனங்களே அவனுடைய நெஞ்சைப் பிசைந்தெடுத்தன. அவன் கண்களில் கண்ணிர் பொங்கியது; பெருகியது.

"அத்தான்!' என்று பதட்டத்துடன் கூப்பிட். டாள் அன்னம். .

'ஊம்,' என்று பதட்டமின்றிக் குரல் கொடுத் தான் வீரமணி. . * . . . . . . .