பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

岛蕊4

என்கிற சத்தியத்துக்குச் சாட்சி சொல்லத்தான் இதோ, என் கையிலே கைக்கு மெய்யாய் உன்னுடைய இந்த ஒற்றை சிமிக்கி விதியாகவும் -வினையாகவும் தெய்வமாகவும் சிரிக்காமல் சிரிச்சுக் கிட்டே இருக்குதாக்கும்!.. இம்மாங் கொத்த நடப்பிலே, என் கையிலே தேடி வந்திருக்கிற இந்த ஒரு வைரச் சிமிக்கிக்கு நீ சொந்தம் கொண் உாடுறியே அந்தச் சொந்தத்துக்கு உன் கையிலே என்ன சாட்சி இருக்குதாம்? சொல்லுடா, ராமையாத் தேவனே !'

மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கியது; ஒரு வழி யாகச் சமாளிக்க எத்தனம் செய்தார் பெரியவர் ஆதிமூலம். இடுப்பு வேட்டியைச் சரிப்படுத்திய வண்ணம் தன் மச்சான் ராமையாத் தேவரை வெஞ்கினத்தோடு முறைத்து வெறித்துப் பார்த் தார் அவர். -

காளியம்மன் சந்நிதிக்கு எல்லை சொல்லிக் காத்து நிற்குமே சாம்பான் சிலை, அம்மாதிரி, ராமையாத் தேவர் சிலையாக மலைத்து நின்று - விட்டார்.

'ஊம்; ஏண்டா ராமையா, வாயடைச்சுப் போய் நின்னுக்கிட்டு இருக்கே? பேசுடா, பேசு! உன் மனச் சாட்சியைப் பேச விடுடா ஊம்!’ என்று அதிகாரம் பண்ணினர் பெரியவர்.

ஆத்திரமும் ஏமாற்றமும் புதுப் புனலாகப் பொங்க, ஆதிமூலத் தேவரை நோக்கினர் ராமை யாத் தேவர். .