பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241

岑经县

யும் உம்மகிட்டே நான் செப்பிட வேண்டும்!" என்று கோடி காட்டிவிட்டு, நின்ருர் ராமையா, இப் பேச்சைக் கேட்டதும், முதியவர் மூர்த் தண்யமாகக் கை கொட்டி நகைத்தார். ‘அப்பனே ராமையாத் தேவா! உண்மையை நீ நம்பறியா? அதை நீ மதிக்கிறீயா? அட,பைத்தியக்காரப் பாவி! கேப்பையிலே நெய் வடியுதின்ன, கேட்பாருக்கு மதி: இல்லையா? நான் உன்னை மாதிரி மதிகெட்டவன் இல்லே! உன்னை மாதிரி, மகள் பேரைச் சொல்லிக் கிட்டு, யாரோ ஊர் பேர் தெரியாத சிறுக்கிக்காக, வைரச் சிமிக்கிகளைப் பண்ணிப்புட்டு, இப்ப அதுகளைக் கோட்டை விட்டுப்புட்டு அம்போன்னு நிற்கிறவன நான்? போடா, போ!' என்று அதிர் வேட்டுச் சிரிப்பை உமிழ்ந்தார்.

'ஏய் ஆதிமூலத் தேவா!... வாயை மறுபடியும் எக்குத் தப்பாய் நீட்டினியோ அப்பாலே நான் கையை நீட்ட வேண்டி வந்திடும். ஜாக்கிரதை'

“சரிதான் போடா, போக்கணங் கெட்ட பய. மவனே!” என்று ஓங்காரமிட்டு உறுமியபடி, ராமையாவை நோக்கிப் பாய்ந்தார் மூத்தவர்.

வீரமணியும் அன்னக் கொடியும் முள் மேல் நின்ருர்கள்.

நாட்டு வைத்தியர் இடைமறித்து, ராமையா வின் கைகளைப் பற்றினர். .

"அந்த வெறும் ப ய ல் கையை நீட்டு வானேன்ன, நீங்க வேலை மெனக்கெட்டு அந்த