பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267

26 7

வீரமணி திடுக்கிட்டான். 'அன்னம்!” என்று: பதறினன். 'அழுதியா அம்மான் மகளே?’ என்று கேட்டான். அவனுக்கும் விழிகளில் கலக்கம் கண்டது.

"மச்சான், நீங்க அடாவடி அடிக்கிறீங்க!” அவன் சிரித்தான். பிறகு சொன்னன்: 'அன்னம், என் தவிப்பு உனக்குப் புரியாது. பாசம் என்னைப் பூ விலங்காகக் கட்டிப் போட்டிருக்குது, இந்த வெள்ளைக் காளை விசயத்தில் மட்டும்!-உன் தவிப்பும் எனக்குப் புரியாமல் இல்லேதான்!'

'அப்பாலே, எனக்கு வழி?” 'உனக்கு வழி காட்டத் தான் நான் இருக் கேனே, புள்ளே!’

'சள்ளைப்படுத்து lங்களே, மச்சான்! என் வழி எனக்குப் புரியும்!”

'ஊகூம்; உன் வழி உனக்குப் பிடிபடாது. ஏன், தெரியுமா? இது இருட்டு நேரம். இருட்டிலேயும் இருட்டு, பேய் இருட்டு மூச்சு விடாமல் நான் சொல்லுறதைக் கேள். உங்க வெள்ளையை உன் கிட்டவே ஒப்படைக்க வேண்டியது என் பொறுப்பு. ஆனல், இப்ப நான் அந்தக் காளையை என் அப்பா கையிலேதான் ஒப்படைப்பேன்!-பின்னடி உன் கிட்டேயே ஒப்படைச்சிப்பிடுறேன் நான்!...என்னை நம்பு. நான் உன்னைக் கண்ணுலம் கட்டிக்கப் போற முறை மச்சாளுக்கும்: ஆமா, சொல்லிப்பிட்டேன்! நம்மோட சொந்தங்களும் பந்தங்களும் ஆத்தர் ஆணேயாக வாழத்தான் போகுது! ஆமா!...”