பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271

27 3

"நான் தங்கச்சி இல்லை!" “தங்கச்சி இல்லையா? அப்படின்ன அக்காவா?'

'ஊகூம். நான் பவளம்... அதாகப்பட்டது, பவளக்கொடி!'

'உன்னுேட பேரைக் கேட்டுக்கிடத்தான் கூப் பிட்டேன். ரொம்ப அழகான பேர்!"

‘அப்படியானல், நான் அழகில்லே, கறுப்புன்னு: இடிக்காமல் இடிக்கிறீயாங்காட்டி, அன்னம்?"

'நாவப்பழம் கறுப்புத்தான். அதை எத்தனை ஆசையோட தின்கிருேம்? நீ கறுப்பால்ை என்ன? அந்தக் கறுப்பிலேயும் மனசைச் சுண்டியிழுக்கிற அந்தம் சந்தமும் சேர்ந்திருக்குதே, பவளம்!”

“என்ைேட அழகிலே மனசைச் சுண்டி இழுக்கக் கூடிய அந்தம் இருக்குது என்கிற துப்பு உனக்குக் கூடப் புரிஞ்சிருக்குதே?’ என்று அட்டகாசமாகச் சிரித்தாள் பவளம். 'அடி, சக்கை!”- கும்மாளம் போட்டாள்.

பவளத்தின் பேச்சுக்கு உண்டான அர்த்தமோ, அல்லது, அவள் சிரிப்புக்கு உரித்தான காரணமோ அன்னத்திற்கு மட்டுப்படவில்லை. 'கைப்புண்ணுக் குக் கண்ணுடியா வேணும்?’ என்ருள்.

'கண்ணுடி வேணும். சில பேருக்குக் மூக்குக் கண்ணுடி தேவைப்படாதா?”

'ரொம்பச் சூட்சுமக்காரியாய் இ ரு ப் பே போலிருக்கே, பவளம்? சரி, சரி. வந்த காலோட