பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

291

39 I

பேட்டையை இலக்கு வைத்து நடந்து கொண் டிருந்தார்கள் ஆடவரும் பெண்டிரும். விடிந்தால் தான் வியாழச் சந்தை. ஆனால், இன்று புதன் கிழமையே இங்கே சந்தை கூடிவிடும்; மகமைக்', காசுகள் குலுங்கும்; லாபக் காசும் புரளும்.

சருகுச் செத்தைகளே-கூளங்களை அடுப்புப் பற்ற வைக்கப் பொறுக்கினுள் அன்னம்! அடுப்படி யில் ஒழுகிக் கிடக்கிறது. தேங்கி நின்ற மழை நீரைக் காலால் எற்றிவிட்டாள் இன்னும் கொஞ்ச நாள் பாடு. அப்புறம் ஆவணி விடிந்ததும், புது மனைக்குக் குடி போய் விடலாம். மேளதாளம் முழங்கிடத் தோன்றிய திருமண வைபவக் காட்சி ஏடு விரிய, அந்தக் கனவின் மோனத்தில் கை குவித்து, மேனி சில்லிட்டு நின்ருள் கன்னிப்பூ, அன்னக் கொடி, "மச்சான்!' என்று வாய்விட்டு விம்மினுள். கூப்பிட்ட குரலுக்குச் சடுகுடு போட்டு ஒட்டமாக ஓடிவரப் பழகியவன் அல்லவா வீரமணி! ஆனல், அழையாத வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாளே பவளம்? அப்பா வரட்டும்! - இவளை ஒரு கை பார்க்காமலா நான் நல்ல மூச்சு விடப் போறேன்? - நெடு மூச்சு நீண்டது.

மாமன்காரர் ஆதிமூலத் தேவர் இடுக்கி" வைத்திருக்கும் வைரச் சிமிக்கிகளும், அப்பன்காரர் 'சொடுக்கி வைத்திருக்கும் பிராமிசரி நோட்டும் விக்கிரமாதித்தனின் பதுமைக் காலத்தைச் சிவப்புக் கோடிட்டுக் காட்டியபடி, கூடுவிட்டுக் கூடு பாய்ந்தன. தூக்கியெறிந்து பேசிய பவளக்கொடி யின் அநியாயப் பழியும் 'அம்மடங்கு கொண்ட