பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

*அப்படியா'

அத்தோடு, பேச்சை மட்டுப்படுத்திக் கொண் உார் மச்சு வீட்டுக்காரர்.

அச்சமயம்:

சாதி மல்விப் பூவின் நெடி, கொடி கட்டிப் படர்ந்து வந்தது; அன்ன நடை பயின்று வந்தது.

ஆசை, கனவாக நிழலாட, கனவு அன்பாக ஒளியாட, ஏதோ ஒரு திடமான கணிப்புடன் வீரமணி வெளியே எட்டிப் பார்த்தான்; மறுகணம் உதட்டிதழ்களிலே நளினமும், கண்ணிதழ்களிலே பரவசமும் மிதக்க, அப்படியே மெய்ம் மறந்து நின்ருன், பிறகு சுய உணர்வு கொண்டான். பெற்றவர் பக்கம் திரும்பினன். அப்பா, அப்பா! தம்ப அன்னம் வந்து நம்பவீட்டுத் தலைவாசல் நிலப் படியிலேயே நின்னுக்கிட்டு இருக்குதுங்களே. அப்பா!' என்று ஆர்வத்தோடு செய்தியை வெளி யிட்டான் இளவல்.

ஆதிமூலம் தமக்கே உரித்தான அமைதி கொண்டு தலையை உயர்த்தினர். புகையிலேயை எடுத்தார், பிறகு நிதானமாகச் செல்லப்பிள்ளையை நோக்கினர். 'அப்படியா? உன் வீடு தேடி வந்த உன் அம்மான்மகளே வா’ என்று சொல்வி,அத்தை மகனை நீ கையேந்தி வரவேற்க வேண்டியது தானே ஒழுங்கு, வீரமணி? ஊம், போ!' என்ருர்.