பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

68

'புதுசா என்ன சொல்லப் போகுதுங்க, அப்பா?’ என்று கூறி நிறுத்தினுன் வீரமணி. முதுகைச் சொறிந்து கொண்டான். ஏறிட்டான். ‘எல்லாம் ஏற்கெனவே நம்பளுக்குத் தெரிஞ்ச ரகசியம்தானுங்க. நீங்களும் அம்மான் ராமையாத் தேவரும் ஆதியிலே ராசியாகப் பேசிப் புழங்கிட்டுச் சுமுகமாய் இருந்த காலத்திலே, நீங்க அம்மான் கிட்டே வாங்கின கடன் தொகை பதினெட்டா யிரம் ரூபாய்தான்! ஆளு, நீங்க எழுதிக் கொடுத்ததோ ரூபாய் இருபதாயிரத்துக்கு 1அம்மானுக்கு நீங்க புரோநோட்டு வரைஞ்சு, கையொப்பம் போட்டுக் கொடுத்த அந்தத் தொகை-பிராமிசரி நோட்டுத் தொகை ரூபாய் இரு பதாயிரத்தையும். சட்டப்படி அதுக்கு உண்டான ஆறேகால் சதவீத வட்டியையும் உடனடியாய் நீங்க வாதிக்குக் கட்டியாக வேணும்னு தீர்ப்பிலே எழுதி யிருக்குதுங்க, அப்பா!' என்று விவரித்தான் இளைஞன்.

ஆதிமூலம் நிதானம் காக்க எத்தனம்செய்தார்: வீண்! கண்கள் ரத்தம் கட்டிச் சிவந்தன. 'ராமையா அடுத்துக் கெடுத்தவன்!... நயவஞ்ச கன்!? சொற்களில் சோளம் பொறிந்தது. நெடு மூச்சை நெட்டித் தள்ளியபின் பேச ஆரம்பம் பண்ணினர்: -

'தம்பி, உலகத்திலே என்னென்னமோ இடுசாமமெல்லாம் தலைகீழாய் நடக்குது. உன் தாய் மாமன நினைச்சுப் பார்த்தாக்க, உண்ண சோறு உடம்பிலே ஒட்டலே! ஆன. அந்தப் படுபாவிக்கு