பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

77

தான் எலிப் பண்ணையும் பேரன் பேத்தி எடுத்துகிட்

டிருக்குது!...'

ஊர் நாட்டாண்மைத் தேவருக்கு மூச்சு வாங்கி

யது; பேச்சு பின் வாங்கியது.

கார்த்திகைப் பணி மூட்டத்தில் கணப்பின் சந்நிதியில் குளிர் காய்கிற மன உணர்வை அடைந் தான் வீரமணி, உணக்கையாய் இருந்தது. சுறுசுறுப் போடு நிமிர்ந்து அமர்ந்து கொண்டான். காவிரித் தரணியாம் தஞ்சையிலே தேர்வின் தீர்ப்பை நாளிதழ் வாய் மூலமாக அவன் அறிவதற்குள் அவன் அனுபவித்த தொல்லைகள் மீண்டன.

வீரமணி!'

'ஊம்; பேசுங்க அப்பா!'

'தம்பி, உன்னைத் தவம் இருந்து, விரதம் பிடிச்சு,முந்நூறு நாள் சுமந்து பெற்ற புண்ணியவதி வள்ளியம்மை இருந்த வரைக்கும் இந்த வீட்டிலே மகாலட்சுமி அல்லும் பகலும் கொழிச்சுக்கிட்டே இருந்தாப்பா. ஒரு முட்டு முடை ஏற்பட்டது கிடை யவே கிடையாது. வானம் பார்த்த பூமியானலும் வெள்ளாமை விளைச்சலுக்குப் பாடு வந்தது இல்லை; மகசூல் கையைக் கடிச்சது கிடையாது. காலம் மானமாய் ஒடிச்சு உன் ஆத்தா செத்துச்சிவலோகம் பறிஞ்சா. அப்பவே பிடிச்சது சனியன். பொய் இல்லே! முன்னே ஒரு தரம் செப்பினப்பிலே, அந்தச் சீதேவியோடே சகலமுமே போயிடுச்சு!-வயல் காட்டிலே வாரத் தகராறு, குத்தகைச் சங்கடம் அது