பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

9 6

காலடிச் சத்தம் கேட்கிறது!

ஆதிமூலத் தேவர் மயில்கண்சரிகை விசிறி மடிப்பை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வாசற்படியை அடைந்தார். "வீரமணி, உன் சிநேகிதி தமிழரசிக்குப் பதில் போட்டுடு," என்ப

தாக வீரமணிக்கு நினைவுபடுத்தினர்.

'அதுக்கு இப்பைக்கு என்னஅப்பா அவசரம்?’’

'அப்படிச் சொல்லப்படாது, தம்பி. அன்புக்குமெய்யான அன்புக்கு உண்டான குனலட்சணத் திலே ஒண்னு தான் இந்த அவசரத்தனம்! பாவம், எம்மாம் ஆசையோடே அந்தப் பொண்ணு உன்

பதிலே எதிர்பார்த்துக்கிட்டிருக்கும்!'

'அப்படிங்களா? குமாரி தமிழரசிக்கு நான் என்ன பதில் எழுத வேணும்னு நீக்க உத்தரவு போடுறிங்க?"

பெரியவர் வெடிச்சிரிப்பை வெடித்தார். 'நல்ல பிள்ளையப்பா நீ! இந்தக் கதை, காரணமெல்லாம் இந்தக் கிழட்டுச் சென்மத்துக்கு விளங்குமா, வீரமணி' என்று நிதானம் காத்துக் கூறினர்.

'விடுகதை போடுறதும் புதிர் வைக்கிறதும் உங்களுக்கு எவ்வளவு தொலைவுக்குப் பிடிக்குமோ, அதே அளவுக்குக் கேள்வி கேட்கிறதும் சோதனை பண்ணுறதும் உங்களுக்குப் பிடிக்கும்; இல்லீங்களா, அப்பா?' என்று கேட்டுவிட்டுச் சிரிக்க முயன்ருன் விரமணி.