பக்கம்:காதலா கடமையா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டயத்தையும் வழங்கினான். 'நும் விருப்பம் போற் செய்வீர்' என்று வாழ்த்தினான். மகிணனும் கிள்ளையும் மன்னனை வணங்கி நன்றி செலுத்தினர். பின்னர் மூவரும், தங்கவேலின் பிரிவுக்கு வருந்தித் தத்தம் இடம் சார்ந்தனர்.

மறுநாள் காலை மக்கள் விடுதலை நோக்கி நின்றனர். மன்னன் இரவு நடந்த நிகழ்ச்சிகளை மக்கட்குரைத்து,


"நாங்கள் நல்கிய தல்ல அவ்விடுதலை
நீங்களே பெற்றீர் என்று நிகழ்த்தி"

மகிணன் கிள்ளை முதலியோரிடம் நாட்டை ஒப்படைத்துத் தன்னாடு சென்றான். மக்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

பின்பு, மகிணன் கிள்ளையுடன் பெற்றோரை அடைந்தான். நிகழ்ந்தவை உணர்ந்த பெற்றோர் மணமக்களை வாழ்த்தினர். தந்தை மைந்தனை நோக்கி, நம் நாட்டில் இப்போது பல வசதிகள் இல்லையே என்றார். அதற்கு மைந்தன், 'இல்லை யென்பது இனியில்லை. ஒவ்வொருவர்க்கும் ஒருவீடு, ஒருநிலம், ஓர்ஏர் மாடுகள், ஒரு தொழில் அளிக்கப்படும்; 'அனைவரும் ஒரு நிகர்' என்றான். கேட்ட தாய், 'மைந்தனே! நானும் அவற்றைப் பெற வேண்டுமே! சென்று பெற்றுவர ஒரு நல்லுடை இல்லையே!' என்று புகன்றாள். எப்படி நடுநிலை!

எனவே, இத்தகைய விடுதலைக்கும் நல்லாட்சிக்கும் காரணம், காதலர்களின் காதலா? கடமையா? — எண்ணிப்பாருங்கள்!

சுந்தரசண்முகனார்

 

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/15&oldid=1484263" இலிருந்து மீள்விக்கப்பட்டது