பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 காதலும்கல்யாணமும்

‘ஆளுக்கோர் ஐஸ்-கிரீம் சாப்பிடுவோமா?’ என்றான் மோகன், அனாவசியமான பயத்தால் ஏற்கெனவே வறண்டு போயிருந்த தன் நெஞ்சை அதைக் கொண்டாவது கொஞ்சம் ஈரமாக்கிக் கொள்ளலாமே என்று

‘கொண்டு வரச் சொல்; அதனாலாவது என் உள்ளம் குளிருகிறதா என்று பார்ப்போம்’ எனச் சொல்லலாமா என்று தோன்றிற்று அருணாவுக்கு; ஆனால் சொல்லவில்லை.

அதற்குள் ஐஸ்-கிரீம் பையனே அங்கு வந்து நின்று விடவே, ஆளுக்கோர் ஐஸ்-கிரீமை எடுத்துக் கொடுத்தாள்

Lss

அப்போது, ‘அட, அருணாவா, நான் பார்க்கவே யில்லையே?’ என்று யாரோ சொல்வது தன் காதில் விழவே, அருணா திரும்பிப் பார்த்தாள்; அழகன் ஒருவனுடன் நின்று கொண்டு இருந்த அழகி ஒருத்தி, “இதுவரை உனக்கு என்னை மட்டும் தான் தெரியும், இல்லையா? இப்போது இவரையும் தெரிந்துகொள்; இவர் என் காதலர்-நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்; இவள் என் சிநேகிதி அருணா என்று தன்னுடன் இருந்த தன் காதலனை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள், ஆங்கிலத்தில்!

அவ்வளவுதான்!-அருணாவின் கையிலிருந்த ஐஸ்-கிரீம் நழுவிக் கீழே விழுந்தது; அவள் மூர்ச்சையானாள்

காரணம் வேறொன்றும் இல்லை; அந்த அழகியுடன் இருந்த அழகன் கந்தராயிருந்ததுதான்

18. யார் இந்தச் சுந்தர்?

1ொழ்க்கை எத்தனையோ பேருக்கு எத்தனையோ விதமாகத் தோன்றுகிறது. ஆனால் சுந்தருக்கோ அது ஒரு விளையாட்டாகத் தோன்றிற்று. காரணம், அவன் அப்பா சுகானந்தத்துக்கே அது இன்னும் ஒரு விளையாட்டாக இருந்து வந்ததுதான்!