பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 காதலும்கல்யாணமும்

இல்லையென்றால் இந்த வீட்டுப் பெரிய மனிதரையும் தெரிந்திருப்பதோடு, அவருடையக் கார் டிரைவரையும் தெரிந்திருக்குமா இவருக்கு?

பெரிய இடமாம், பெரிய இடம்!-இருக்க ஒரு குடிசைக் கூட இல்லாமல் இந்த உலகத்தில் தவிப்போர் எத்தனையோ பேர்! ஆனால் இந்த வீட்டுப் பெரிய மனிதருக்கோ ஒரு வீடல்ல, இரண்டு வீடல்ல-எத்தனையோ வீடுகள் இந்தச் சென்னைமாநகரிலே இருக்கின்றனவாம்!

வீடுகள் என்றால் சாதாரண வீடுகளாகவா இருக்கும்?இருக்காது; ஒவ்வொன்றும் ஒரு குட்டி நகரமாகவே இருக்கும்!

உதாரணத்துக்கு இந்த ஒரு வீடே போதுமே?தெருவிலுள்ள கேட்'டுக்கும், பங்களாவை ஒட்டினாற் போலுள்ள போர்டிகோ'வுக்கும் கிட்டத்தட்ட ஒரு பர்லாங் தூரமாவது இருக்கும். முன்னால்தான் இப்படியென்றால், பின்னாலோ?-ஒரு காடே உருவாகியிருக்கிறது!-எத்தனை மரங்கள், எத்தனைச் செடிகள், எத்தனைக் கொடிகள்

ஏன் இந்தக் காடு இங்கே?-ஒருவேளை தன் ஆசை நாயகியுடன் ஒடிப் பிடித்து விளையாடுவதற்காக இருக்குமோ?-அப்படியே விளையுாடினாலும் அவள் அந்த டிரைவருடன் அல்லவா விளையாடுவாள் போலிருக்கிறது!

விசுவாசமுள்ள வேலைக்காரன்-எஜமான் இட்ட வேலையை மட்டுமல்ல; எசமானி இட்ட வேலையையும் தட்டாமல் செய்யும் விசுவாசமுள்ள வேலைக்காரன்-அந்த வேலையில் எந்த விதமான பேதமும் பார்ப்பதில்லை போலிருக்கிறது, அவன்

வேலையில் இருந்தபோது மட்டுமல்ல; இல்லாத போதும் அவன் விசுவாசமுள்ள வேலைக்காரனாகவே இருக்கிறான்போல் இருக்கிறது-ஒருவேளை இந்த வேலைக்கும் அவனுக்கு ஏதாவது கூலி கிடைக்கிறதோ என்னமோ, யார் கண்டது?