பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 காதலும்கல்யாணமும்

அடுத்தாற்போல் பொரித்து எடுத்த உரித்த கோழி இரண்டுடனும், அவித்து எடுத்த முட்டை பன்னிரண்டுடனும் சமையற்காரன் உள்ளே நுழைந்தான். “ஏண்டா கிட்டா, அந்த ஆபரேட்'டரைக் கொஞ்சம் இங்கே வரச்சொல்லேன்’ என்றார் சுகானந்தம் அவனிடம்.

‘இதோ வரச் சொல்கிறேன்!” என்று அவன் நடந்தான்.

கீதா மறுபடியும் வந்து, ‘கலெக்டர் வேறு கவனிக்க முடியுமா என்றுப் போனில் கேட்கிறார்; என்ன சொல்ல?” என்றாள் புன்முறுவலுடன்.

‘அவரை அவசியம் கவனிக்க வேண்டியதுதான்; அவரால் நமக்கு எத்தனையோ காரியம் நடக்கிறது-வரச் சொல்!” என்றார் சுகானந்தம்; அவள் போய்விட்டாள்.

‘குடிப்பது தீமை, தீமை என்கிறார்கள்; அதனால் எவ்வளவு பெரிய நண்பர்களெல்லாம் நமக்கு எவ்வளவு சாதாரணமாகக் கிடைக்கிறார்கள்!’ என்றார் ஆபத்சகாயம், உள்ளே சென்ற ‘சரக்கின் சிறப்பால் உயரப் பறக்காமல் பறந்துகொண்டே.

‘இல்லாதவனுக்கு எதுதான் தீமையில்லை, எல்லாம் தீமைதான். குடி மட்டும் என்ன, கூழும் அவனுக்குத் தீமைதான் செய்கிறது!”

‘நன்றாகச் சொன்னிர்கள்! வேளா வேளைக்கு அது அவனைப் பசியால் துடிக்கவைப்பதோடு, சில சமயம் செய்யத் தகாத காரியங்களையெல்லாம் கூடச் செய்ய வைத்து விடுகிறதே?”

‘ஆனால் ஒன்று. அந்தப் பசிதான் நமக்கு வரப்பிரசாதம்; இல்லாவிட்டால் அந்தப் பயல்களின் ரத்தத்தை அவர்களுக்குத் தெரியாமலே உறிஞ்சிக் குடிக்க நம்மைப் போன்றவர்களால் முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’ என்றார் சுகானந்தம்.