பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 காதலும்கல்யாணமும்

மாட்டார்; அவர்கள் அல்சேஷன் நாய் வளர்க்கிறார்கள் என்பதற்காக இவரும் ஒர் அல்சேஷன் நாயை வளர்த்து, அதற்கென்று ஒரு குடும்பத்தையே உருவாக்கியிருக்க மாட்டார்-இப்படியாக அவர் எல்லா வகையிலும் மேல் வர்க்கத்தாரைப் பின் பற்றப் போய், அதனால் வரவுக்கு மேல் செலவு செய்து, அந்தச் செலவைச் சரிக்கட்டுவதற்காக ஒரு கையால் லஞ்சம் வாங்கினால் போதாதென்று இரு கைகளாலும் லஞ்சம் வாங்கி, அந்த லஞ்சம் வாங்க முடியாத நிலைக்கு வந்ததும், முன்னாள் திருடர்களுக்கெல்லாம் முன்னோடியாயிருந்து உதவி, அந்த உதவியால் தான் பெற்ற பயனைக் கொண்டே தனக்கென்று ஒரு தனி வீடு வேண்டும் என்ற தன் முதல் லட்சியத்தை முதலில் அடைந்தவர் அவர் அத்தகையவரைப் பற்றி அம்மாவுக்குக் தெரியாமல் இருக்க முடியுமா?-தெரியத்தான் தெரிந்தது. எனினும் அவரை அவளால் ஒன்றும் செய்யமுடியவில்லை, ‘கடவுளே, என் கணவருக்கு நல்ல புத்தியைக் கொடு என்று அவ்வப்போதுக் கடவுளை வேண்டிக்கொள்வதைத் தவிர

அப்படியும் ஒரு முறை அவள் இதற்காக அவருடன் பிணங்கிப் பார்த்தாளாம்; அதற்கு அவர் இணங்கிப் போகாமல் அவள் சம்மதம் இல்லாமலேயே அவளை அவளுடைய பிறந்தகத்துக்கு அனுப்பி வைத்துவிட்டாராம். அதன் பலனை அக்கம் பக்கத்தாரால் வேண்டிய மட்டும் அனுபவித்த பிறகு, அவருடைய சம்மதம் இல்லாமலேயே அவள் திரும்பி வந்து அவருடன் சேர்ந்துகொண்டு விட்டாளாம்!

இந்த அழகான வாழ்க்கையில் தன்னையும் தன் தங்கையையும் எப்படியோ பெற்று வளர்த்துவிட்ட அவளைத் தன் வழிக்குக் கொண்டு வருவதில் அவ்வளவு சிரமம் இருப்பதாகத் தோன்றவில்லை அவனுக்கு. மிஞ்சிப்போனால், இதோ, நான் போய் தண்டவாளத்தின் மேல் தலை வைத்துப் படுத்துவிடுகிறேன்! என்று ஒரு