பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 காதலும்கல்யாணமும்

மணி சிரித்தான்; சிரித்துவிட்டுச் சொன்னான்: ‘'நான் வாழ்வதற்காகப் பிறர் சாவதைவிட, பிறர் வாழ் வதற்காக நான் சாவதைத்தான் என் உள்ளம் விரும்புகிறது” இந்தச் சமயத்தில், ‘வாழ்வதில் விருப்பம் காட்டாதீர் கள்; சாவதிலேயே விருப்பம் காட்டுங்கள்!’ என்று யாரோ முணுமுணுப்பது அவர்கள் காதில் விழுந்தது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்; ஆபத்சகாயம் அவர்களுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தார்.

‘வாருங்கள் அப்பா இன்று காலை இந்த வீட்டை விட்டுப் போகும்போது இவ்வளவு சீக்கரம் நான் இங்கே திரும்பி வருவேன் என்று நினைக்கவில்லை!” என்றான் மோகன், அவரைக் கண்டதும்.

‘வேறு எங்கே போவதாக இருந்தாய்?’ என்று அவர் கேட்டார்.

“அதைப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வருவதற்குள்தான் இவன் என்னை இங்கே வரும்படி செய்துவிட்டானே?” என்றான் அவன், மணியைச் சுட்டிக் காட்டி.

‘என்னடா கதைக்கிறீர்கள்? என்னிடம் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டுமென்ற உத்தேசமே உங்களுக்கு இல்லைபோலிருக்கிறது”

‘எந்த உண்மையை’ ‘அதுதான், அந்தத் தொழிலில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் உண்மையை!”

‘எந்தத் தொழிலில்?” மணி குறுக்கிட்டான்; குறுக்கிட்டுச் சொன்னான்: ‘'சாட்சிக்கு போலீசார் வேறு யாரையும் பிடிக்க வேண்டியதில்லை; இவரைப் பிடித்தால் போதும்!”

இப்போதுதான் மோகனுக்கு விஷயம் புரிந்தது; ‘ஏன், இவரே அந்தத் தொழிலில் நாம் ஈடுபட்டிருப்பதாகச் சொல்கிறாரா?’ என்றுக் கேட்டான்.