பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 85

பலர் கடைசி வினாடியில் தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!”

மீனாட்சியம்மாள் இப்படிச் சொன்னாளோ இல்லையோ, ராதாவின் கண்களில் நீர் மல்கிவிட்டது; ‘அப்படி எதுவும் நடக்கவிடாமல் நீங்கள்தானம்மா, இவளைக் காப்பாற்ற வேண்டும்’ என்றாள், அவளுடைய கால்களைப் பற்றாத குறையாக.

‘'அடப் பைத்தியமே, அதற்குள் அழ ஆரம்பித்து விட்டாயா நீ? உண்மையைச் சொல்லப்போனால் யாரையும் யாராலும் காப்பாற்றிவிடமுடியாது; அவரவர்களை அவரவர்களேதான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் எதற்கும் அஞ்சாத நெஞ்சுறுதி வேண்டும்; அது இல்லையென்றால், இவள் அவனைக் காதலிப்பதைவிடக் காதலிக்காமலே இருந்து விடலாம்!’ என்றாள் அவள்.

‘இனிமேல் அது எப்படி அம்மா, சாத்தியம்?’ என்றாள் இவள்.

‘'சாத்தியமில்லைதான்! அதற்காக இவள் எடுத்ததற்கெல்லாம் அது என்னமோ எனக்குத் தெரியாது, அது என்னமோ எனக்குத் தெரியாது!’ என்று சொல்லிக் கொண்டிருந்தால் எல்லாவற்றையும் நாமே தெரிந்துக் கொண்டு விட முடியுமா, என்ன?”

‘நீங்கள் சொல்வதும் உண்மைதான்!-ஏண்டி பாமா, உனக்குத் தெரிந்ததைச் சொல்லேண்டி? என்றாள் ராதா, மறுபடியும் பாமாவின் பக்கம் திரும்பி.

அவ்வளவுதான் “அது என்னமோ எனக்குத் தெரியாது, அக்கா!’ என்று சொல்லிக்கொண்டே அவள் ஓவென்று அழவே ஆரம்பித்துவிட்டாள்!

மீனாட்சியம்மாள் சிரித்தாள்; சிரித்துவிட்டுச் சொன்னாள்: ‘அது என்னமோ எனக்குத் தெரியாது என்பதற்கு அடுத்தபடியாக இந்த நாட்டு பெண்களுக்குத் தெரிந்தது இது