பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 89

‘'நானா ஏமாற்றினேன், அவர்தானே ஏமாற்றினார்?’ என்றாள் பாமா, மேலும் கொஞ்சம் துணிந்து.

‘சபாஷ்! அப்படிப் பேசு; அஞ்சாமல் பேசு’ என்று அவளை ஊக்கினாள் மீனாட்சியம்மாள்.

‘நீ இன்று சொல்வது சரி; ஆனால் இன்னொரு நாள் அவன் எங்களை ஏமாற்றும்படி நீ } விட்டுவிடாதே!” என்றார் சொக்கலிங்கனார்.

அதுவரை அவர்கள் பேசியதனைத்தையும் அங்கே நின்று கேட்டுக்கொண்டிருந்த பாலு, ‘அக்கா விட்டாலும் இனி மேல் நான் விடமாட்டேன், மாமா இன்னொரு முறை அவர் இங்கே வரட்டும்; காது எட்டாவிட்டாலும் கையைப் பிடித்தாவது, இழுத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்’ என்றான், எல்லோரையும் தள்ளிக்கொண்டு முன்னால் வந்து நின்று.

‘அப்புறம் என்ன, நீ அவனைக் கொண்டு வந்து வாசலில் நிறுத்த வேண்டியதுதான் பாக்கி!’ என்றார் அவர், அவன் முதுகில் தட்டிக் கொடுத்தபடி.

‘சரி, இவர்களுடைய காதல் விவகாரம் முடியும் வரை நீ அவனுக்காகக் கொண்டு வந்து போட்ட நாற்காலி மேஜையெல்லாம் இங்கேயே இருக்கட்டும்; அவற்றைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு நீ அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருக்காதே!’ என்று ராதாவிடம் சொல்லிவிட்டுத் திரும்பினாள் மீனாட்சியம்மாள்.

‘அங்கேதான் எங்களுக்கு வேண்டிய மட்டும் இருக்கிறதே, இங்கே இருப்பது இங்கேயே இருக்கட்டும்’ என்று சொல்லிவிட்டுச் சொக்கலிங்கனாரும் தம் மனைவியைத் தொடர்ந்தார்.

“அவருக்காக நான் வீட்டை அலங்காரம் செய்ததோடு நின்றுவிடவில்லை, அம்மா...’ என்று மேலே சொல்ல முடியாமல் நிறுத்தினாள் ராதா.