126
பொ:— (வெட்கத்துடன்) ஆகவேண்டியதெல்லாம் ஆயிப்போச்சு...
தங்:— (சிரித்தபடி) ஓஹோ! எண்ணம் கைகூடிப் போச்சா?
பொ:— நீ, வேடிக்கையாய்ப் பேசறே தங்கவேலு—அண்ணக்கி, ஊரையே மிரட்டற நானு நடுங்கின நடுக்கம் எனக்கல்லவா தெரியும், பாவம் பொன்னி இருக்கே, அது பேயறைஞ்சது போலாயிட்டுது.
தங்:— எப்படியோ ஒண்ணு, விவசாரம் முடிஞ்சுப் போச்சு...
பொ:— விவகாரம் முடிஞ்சுதுன்னா, வேதனை தீர்ந்துப் போச்சா. அப்பாருக்குத் துளிக்கூடச் சந்தேகம் வராதபடிக்கு நடந்து கொண்டோம். ஆனா, ஒவ்வொரு நாளும் திகில்தான், எங்கே குட்டு வெளியாகி விடுதோன்னு...
தங்:— ஓடிப் போகணும்னு யோசனை செய்தது என்ன, ஆச்சி...
பொ:— அந்தக் கண்றாவியைக் கேளேன் — பொன்னியோட அப்பா. காச்சல்லே படுத்துக்கிட்டாரு ஒரு மாசம்—எப்படி ஊரைவிட்டுப் போயிட முடியும். பாவி மனுஷன், என் கையை எடுத்துக் கண்ணிலே ஒத்திகிட்டு, பொன்னா! நான் இனிப் பிழைக்கமாட்டேன்! என் மகனோ, குடும்பத்தைக் கவனிக்காதவனாயிட்டான்—பொண்ணோ தாலி அறுத்தது— என் குடும்பம் என்ன ஆகுதோ—என்னா கதியோன்னு சொல்லிக் கதறுவார். ‘சாதாரண ஜுரம்தானே, ஆபத்து ஒண்ணும் கிடையாது, வீணா மனசை அலட்டிக்காதேன்னு’ தைரியம் சொல்லறது. ‘என் மகளே இல்லேன்னா, நான் செத்த இடத்திலே இன்னேரம் பில்லு முளைச்சிப் போயிருக்கும்’ என்பாரு எப்படி இருக்கும் எங்க ரெண்டு பேரோட மனசு. ஒரே கொழப்பம். இந்தக் கொழப்பத்திலே, ஓடிப்போயி, வேற ஊரிலே குடும்பம் நடத்தவேணும் என்கிற என்ணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிச்சுது — ஊருக்குத் தெரியாமப்படிக்கு, இப்படியே காலந்தள்ளினா என்னான்னு தைரியம்