128
யோட யோசனைக்கு இணங்க முடியல்லே. பணம் தாராளமா நடமாடின நேரம். என்னோட ஆட்களோட அதிகமான பழக்கம், எப்பவும் வெள்ளைக் குதிரை மேலேயே இருக்கவேண்டி இருந்தது சுருக்கமாகச் சொல்லவேணும்னு, நான் அந்தச் சமயம் போக்கிரி பொன்னனாக இருந்தேன். பொன்னியோட நாயகனா இல்லே. இது தெரியாமப்படிக்கு, பொன்னி, கொஞ்சம் பிடிவாதமா, கோவமா, பேசினா, எனக்குப் பழய சுபாவம் வந்துட்டுது. போடி போன்னு சொல்ல ஆரம்பிச்சேன்...
தங்:— அட படுபாவி! நம்பினவளை மோசம் செய்யலாமா? அவளோ கர்ப்பம்—ஊரிலே தலைகாட்ட முடியுமா...? அதனாலேதான் வற்புறுத்தினா, பாவம், ஓடிப்போயாகனும்னு...
பொ:— நீ சொல்றது சரி, தங்கவேல்! ஆனா நான்தான் பழைய பொன்னனா இருந்தேனே—நான் இருந்த நிலைமையும், ஈடுபட்டிருந்த வேலையும், என்னை நியாய அனியாயத்தைக் கவனிக்க வைக்குமா?
தங்:— அதைச் சொல்லப்போனா, உன்னைப்போலக் கேடுகெட்டவன் யாரும் இல்லைன்னு தான் சொல்லவேணும். மாடுபோல உழைக்கிற பண்ணைக்காரனைச் சாகடிக்கிறான் மிராசுதாரன், நீ அவனுக்காக, படை திரட்டிக்கொண்டு போறே? நியாயமா? நீயும் ஏழை, பண்ணையாட்களும் ஏழைகள்... ஏழையை அடிக்க ஏழை! பணக்காரன் ஏவுகிறான், பழிபாவம் கவனிக்காமப்படிக்கு, நீ போறே, பண்ணையாட்களை அடிக்க, உதைக்க...
பொ:— நான் செய்ததெல்லாம் தப்பு என்கிற புத்தி இப்பத்தானேப்பா வந்துது. அப்பொ, இந்த தர்ம நியாயத்தை நினைக்க நேரம் ஏது? கொளுத்து குடிசையை என்பான் மிராசுதாரன்—போடு ஐம்பதுன்னு கேட்பேன். கொடுப்பான். குடிசை சாம்பல்! அவ கொண்டையைப் பிடிச்சு இழுத்து வாடா என்பான் மிராசுதாரன். எடு