உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

ஜம்புகேச ஐயர்னு, பெரிய ஆசாமி — அவரோட மக— வைதேஹின்னு பேர்.. ஒரே மக...

தா:— நம்ம தம்பி எங்கே இருக்காரு?

ச:— யாரைக் கேட்கறே... இரண்டாவது பிள்ளையையா! அவன் சினிமாவிலே பெரிய ஆக்டர்டா இப்ப. நீ இருக்கிற ஊரிலே சினிமா இருக்கோ? அதிலே பார்க்கலாமே— அவன் படம் அடிக்கடி வரும்—போன மாசம் வந்திருந்தான் — நன்னாத்தான் இருக்கான் —(தன் கை விரலைக் காட்டி) பார்த்தயோ அவன் வந்துபோனதோட அடையாளம்...

தா:— (பயந்து) என்ன சாமி இது...காயம் பட்டிருக்கு போலிருக்கு..

ச:— (சிரிப்பாக) ஆமாம்... விரல் நசுங்கியே போயிட்டுது...

தா:— ஏன்... எப்படி அடிபட்டுது...?

ச:— அவன் புதுசா ஒரு மோட்டார் கார் வாங்கிண்டு வந்தான்—பணம் கண்மண் தெரியாமே கொட்டிக் கொடுத்திருக்கான் மோட்டாருக்கும் —பதினெட்டு ஆயிரம் விலை—அந்தக் காரிலே ஏறிண்டு போனேன் — கதவு இருக்கே, மோட்டார் கதவு —அதை சாத்தினான்—நான் அசட்டுத்தனமா, அதன் இடுக்கிலே, கை வைச்சிண்டிருந்துட்டேன்..விரல் நசுங்கிட்டுது... என்ன செய்யறது...

தா:— துடிதுடிச்சிப் போயிருப்பிங்களே!...

ச:— ஆமாம்...வலி......அந்தப் பய, சிரிக்கிறான்....என்னப்பா இது, கதவைச் சாத்தறப்போ ஜாக்ரதையா இருக்க வேணாமோ?... கர்நாடகமா இருக்கீரே இன்னமும்னு கேலி செய்யறான்...... சௌக்யமா இருக்கான்.... சினிமாப் பேர் வேறேடா, தாண்டவா? நீ பழயபடி, பிச்சுமணின்னு எண்ணிண்டு நோடீசிலே பார்த்தா. புரியாது...அவனுக்கு சினிமாவிலே அருள்குமார்னு பேர்! என் மக, சுகுணாடா... அதுதான் கர்மம்.. விதவையாகிவிட்டது..... பெரிய