இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
164
சு:— காலையிலா, மாலையிலா?
தங்:— ஓய்வு எப்போது...?
சு:— நீங்கள் இங்கே வருகிறபோது, ஓய்வுதான்.
தங்:— (புன்னகையுடன்) காலையிலேயே வருகிறேன்.
சு:— நாளைக்காலை...நிச்சயம்...
தங்:— வருகிறேன்...
(குழைவாகக் கூறுகிறான். சுகுணா பாசத்துடன் பார்க்கிறாள். தங்கவேல் விடைபெற்றுக் கொள்ளுகிறான்.)
காட்சி—38
[சம்பந்தம் வீடு—தங்கவேல், பொன்னன் உரையாடல்]
தங்:— (பாசத்துடன்) மறுநாளே சென்றேன் — பிறகு ஒவ்வொரு நாளும் சென்றேன்...
பொ:— பால்பானையைப் பார்த்துவிட்ட பூனைபோலத்தான், அங்கேயே வட்டமிட்டிருப்பே...
தங்:— நீ? பொன்னி இருக்கிற ஊரையே கோயிலா எண்ணிக் கொண்டுதானே பிரதட்சணம் வந்தே?...
பொ:— அடெ ஏம்பா, நாம்ப ஒருத்தருக்கு ஒருத்தர் கேலி பேசிக்கொள்ள முடியுமா?சரி—டாக்டர் வீடே கதின்னு ஆயிட்டே.
தங்:— நாடகம் கீடகம்... ஒண்ணு கிடையாது—எல்லாத்தையும் மறந்தாச்சி...
பொ:— அது அப்படித்தான்! அந்த விவகாரம் கிடச்சுப் போனா, அவ்வளவுதான் எல்லா வேலையும் மறந்து