உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167

கிறது சரியா, ஏன் ஏமாளியா இருக்கறீங்கன்னு கேட்குது.

பொ:— அதுவும் நியாயமாத்தான் இருக்குது. ஆனாலும், இவங்கதானே இதை எல்லாம் சொல்லிக் கொடுக்கறாங்க...தப்புத்தானே... அது..!

தங்:— தப்புதான்! ஒத்துக் கொள்ளுது, சுகுணா! ஆனா சுகுணா கேட்டுது, திருப்பதிக்கு போனா புண்யம், ராமேஸ்வரம் போய்வந்தா பாபம் போகும்னு எல்லாம் எங்களவங்க சொல்றாங்க—ஆனா நீங்க ஏன் கவனிச்சுப் பார்க்கக்கூடாது. திருப்பதிக்கு நாங்க போறபோது, ரோடிலேயா கோவிந்தா கோவிந்தான்னு புரள்றோம் — மொட்டை அடிச்சிக்கிட்டு தலையைத் தடவிக்கொண்டா வந்து சேர்கிறோம்? காவடி தூக்கறமா, நாக்கைக் குத்திக் கொள்றது, மூக்கை அறுத்துக் கொள்றது, இப்படி எல்லாமா செய்யறோம்—இதைக் கவனிச்சித்தானே மத்தவங்க நடந்துகொள்ள வேணும்னு, சுகுணா விளக்கமாகச் சொல்லும்—

பொ:— அதுவும் உண்மையாத்தான் இருக்கு, நம்ப ஜனங்களுக்கு, அறிவு வளரவேணும்—இதோ பாரேன் எனக்கு விஷயம் புரியறதுக்கு, இம்மாங்காலமாச்சி... என்னைப் போல எவ்வளவோ, பேரு!

தங்:— உன்னைப்போல உள்ளவங்கதான் அதிகம்—ஏராளம்—

பொ:— ஆனா ஒரு விஷயம் கவனிச்சயா — எங்களுக்குச் சுலபத்திலே புரியாது — புரிஞ்சிப் போச்சுன்னா. அவ்வளவுதான், மாறமாட்டோம்; பயப்படமாட்டோம்? அப்புறம் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான், குழம்பிக்கிட்டுக் கிடக்க மாட்டோம்.

தங்:— ஆமாம் — உன்னைப்போல உள்ளவங்களுக்கு இருக்கற நெஞ்சழுத்தம் இருக்குதே, அது, நல்ல வழியிலே திரும்பிவிட்டா, நாட்டிற்குக் குறை ஏது? கெட்ட வழியிலே