உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

னோட இரத்தமல்ல—தெருவிலே, போக்கிரிகளோட சண்டை நடந்தது—தடுத்துப் பார்த்தேன் — அதிலே கிடைச்சது — பயப்படாதீங்க...பொன்னி!

(பொன்னி ஓடிவந்து பக்கிரி காலிலே விழ)

பயப்படாதே (அவளைத் தூக்கி நிறுத்தி) அழாதே!

பொ:— (கதறியபடி) அண்ணா உங்களுக்கு ஒரு ஆபத்தும் இல்லையே..

ப:— எனக்கும் இல்லை, உன் புருஷனுக்கும் ஆபத்து இல்லை.

(பொன்னி, ‘அண்ணா!’ என்று மறுபடியும் கதறுகிறாள். தாண்டவராயன், பக்கிரீ என்று பதறிக் கூறுகிறான்.)

அப்பா! போக்கிரி பொன்னனைச் சாகடித்து விட்டேன்.

(இருவரும் பதற) பொன்னியோட புருஷன் பொன்னன்— இருக்கிறான்..

தா:— (கைகளைப் பிசைந்து கொண்டு) ஐயய்யோ! மூளை கொழம்பிப் போச்சி போலிருக்கே...

ப:— அதெல்லாம் இல்லேப்பா? பதறாமப்படிக்கு நான் சொல்றதைக் கேள் —பொன்னனைக் கொலை செய்து விடத்தான் போனேன் — ஆனா அவனோட மனசு எனக்கு நல்லா புரிஞ்சுது — ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கிறோம்பா...

தா:— (திகைத்து) என்னப்பா, தீர்மானம்?

ப:— பொன்னியைப் பொன்னன் கல்யாணம் செய்து கொள்றதுன்னு தீர்மானம்.

(தாண்டவராயன், கண்ணீரையும் துடைக்காமல் பதறியபடி இருக்கிறான். பொன்னி, இன்னதென்று புரியாமலேயே திகைக்கிறாள்.)

திகைக்க வேணும்பா! பொன்னன் சம்மதம் கொடுத்துவிட்டான்...நம்ம குடும்ப கௌரலம் கெடாது—பொன்னியோட வாழ்வும் நாசமாகாது...