உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

பொன்னனுக்கு — அவன் வீட்டு நல்லது பொல்லதுக்கு நாம்ப யாரும் போகப்படாதுன்னு கட்டு திட்டம் செய்யறது — கிராமத்து ஊழியர்களை எல்லாம் கூப்பீட்டு உத்தரவு போடறது, பொன்னனை ஜாதியிலேயிருந்து தள்ளிப் போட்டோம், இனிமேல்பட, யாரும் அவனுக்கு ஊழியம் செய்யக்கூடாதுன்னு சொல்றது. நாறிப்போக மாட்டானா! நடுங்கிப்போக மாட்டானா!

பெரி:— ஏம்பா! முடிஞ்சுதா உன் வீராவேசம் — முடிஞ்சுதா — இல்லே, இன்னும் ஏதாச்சும் பாக்கி இருக்குதா...

ஒ.வை:— கேலியும் கோவமும் காசுக்குப் பிரயோசஜனப் படாதுங்க—ஆமாம்— பெரிதனக்காரருன்னா, நடுவூட்லே மணையும், கை நிறைய தாம்பூலமும் வாங்கி கிட்டுக் கிடக்கறது மட்டும் இல்லிங்க — ஜாதி, குலம், வரைமுறை இதை எல்லாம் கட்டிக் காப்பாத்த வேணும்...

பெரி:— அட, யார்டா சுத்த அறிவு கெட்டவனா இருக்கறே —ஜாதிக் கட்டு கட்டவேணுமாமில்லே ஜாதிக் கட்டு — கட்டினா என்னா நடக்குதுன்னுதான் தெரியுதே, வெட்ட வெளிச்சமா — பெரிய தர்மவானாட்டம் பேசறியோ? உன் யோக்யதைதான் என்னா — ஜாதியை விட்டுத் தள்ளிவைச்ச இடத்திலேதானே, நீ, பொண்ணு எடுத்தே உன் மகனுக்கு பெரிய மனுஷாளோட பேச்சு காதிலே ஏறிச்சா உனக்கு — பெரிய இடம்னு ஓடினே...

ஒ.வை:— சம்பந்தியை ஜாதியிலேயிருந்து தள்ளினாங்கன்னு பேசறயே, அறிவு கெட்டுப்போயி......

பெரி:— ஜாதியை விட்டுத் தள்ளிவைக்கலியா உங்க சம்பந்தி ஜெம்புலிங்க மோலியை...

ஒ.வை:— மறுபடியும் சேர்த்துகிட்டாங்க, தெரியுமேல்லோ......

பெரி:— ஆமாம் — பணம் பாதாளம் வரைக்கும் பாஞ்சுது! அடே சிரிக்காதிங்கப்பா! பணம் இருந்தா ஒரு