67
யாமக் கேட்கறதாகவே வைச்சுக்கோ, சரியான காரியற்தானா? பெரியவங்க, செய்கிற காரியந்தானா?
ச:— பெரிய பெரியவங்களெல்லாம் செய்து இருக்காங்களே... சொல்றானே தங்கவேலு. மகாத்மா மவனுக்கு ராஜ கோபாலாச்சாரி பொண்ணைக் கட்டிக்கொடுத்தாங்க—அதை உலகம் புகழுதா இகழுதான்னு கேட்கிறான்—என்ன பதில் சொல்றது? நீதான் சொல்லேன்— அவங்களெல்லாம் விஷயம் தெரியாதவங்களா, விவரம் அறியாதவங்களா? காலம் மாறுது—நாமும் மாற வேண்டியதுதானே—மாறிக்கொண்டேதானே இருக்கிறோம்.
கி:— (கோபமாக) நீ மாறுவேடா, நீ மாறுவே—புள்ளெயை அடக்க முடியாதவன் நீ, —நீ மாறுவே — எனக்கென்ன! நான் ஏன் மாறவேணும்.
ச:— (சிரித்தபடி) தாத்தாக் கூடத்தான் இந்தக் காலத்துக்குத் தகுந்தபடியா மாறிவிட்டாருன்னு சொல்றான் தங்கவேலு.
கி:— நான் மாறி விட்டனாமா...எதிலேயாம்...
ச:— மூக்குக்கண்ணாடி போட்டுகிட்டு இருக்காரே தாத்தா. போடலாமா... அவங்க தாத்தா காலத்திலே மூக்குக் கண்ணாடி இருந்துதா, அப்ப இல்லாத வழக்கம் இப்ப எதுக்குன்னு தாத்தா யோசிச்சாரா — மூக்குக்கண்ணாடி போட்டா சௌகரியம்னு தோணின உடனே, போட்டுக் கொள்ளலையான்னு கேட்கறான்...
கி:— இதுவொரு காரணம் கண்டு பிடிச்சுட்டானா...?
ச:— சரியாத்தானே இருக்கு அவன் சொல்றது... ராமர் காலத்திலே இல்லாத ரயில் ஓடுது, அரிச்சந்திரன் காலத்திலே இல்லாத ஆகாசவிமானம் பறக்குது, தருமராஜா காலத்திலே இல்லாத தபாலாபீசு இருக்குது, ரேடியோ பாடுது, சினிமா நடக்குது... நாம்பகூட அண்ணக்கி ஒருநாள் சினிமா பார்க்கலே
கி:— சினிமா ஒரு பெரிய அதிசயம்தாண்டா சம்பந்தா— ஒண்ணும் இல்லே அங்கே — வெள்ளைத் துணியைக் கட்டி