81
அ:— என்னைக் கேட்டா. கலப்பு மணம் கூடாதுன்னு தான் சொல்வேன்.
மு:— படம், சுபமா முடியாதே!
அ:— வழி இருக்கு... நான் ஒரு மறுமலர்ச்சி எழுத்தாளாரோடு பேசிண்டிருந்தேன் — அவர் கலப்பு மணத்தை காட்டுவதிலே, நிச்சயமா ஜாதி ஆச்சாரம் கெட்டுத்தான் போகும்னு அபிப்பிராயம் தெரிவிச்சார்.
மு:— அவரோட அபிப்பிராயம் இருக்கட்டும்; படம் சுபமா முடியணுமே...
அ:— அவர் சொல்றார், கதையிலே கடைசி கட்டத்திலே, கலப்பு மணம் நடைபெறக்கூடாது — ஜாதியால் நாம் வேறு வேறு — காதல் நம்மை ஒன்று சேர்க்கிறது — என்றாலும், பாரததேசத்தின் பண்பாட்டைக் கெடுக்கும் பாவிகளாகலாமா நாம்! ஆகவே காதலீ! இந்த ஜன்மத்திலே நாம் சதிபதிகளாக முடியாது. பகவானுடைய அனுக்ரகத்தால் நாம் அடுத்த ஜென்மத்திலாகிலும் ஒரே ஜாதியில் பிறந்து, சதிபதிகளாகி, இன்பம் அனுபவிப்போம்—என்று, கதாநாயகன் கூற வேண்டுமாம் — உடனே, கதாநாயகி காதாநாயகனுடைய காலில் விழுந்து, பிராணபதே! அடுத்த ஜென்மம் என்ன தங்களைப் பதியாக அடைவதற்கு — ஏழு ஜென்மங்கள் வேண்டுமானலும் நான் காத்திருப்பேன். ஆனால், தங்களுக்கு சேவை செய்யும் பாக்யம் பெறமுடியாமல், உயிர் சுமந்துகொண்டு மட்டும் இருக்கமாட்டேன் என்று கூறி, அவன் காலடியிலேயே விழுந்து இறந்துவிட வேண்டும் — அவள் பிணமானது கண்டு, அவனும் பிராணத்தியாகம் செய்து கொள்ள வேண்டும்...
மு:— இரண்டு பிணத்தையும் காட்டி, படத்தை முடிக்கறதா...
அ:— அதுதான் இல்லை துக்கத்தோடு முடிக்கலாமா—உடனே, தேவலோக சீன் — கற்பக விருட்சத்திலே ஒரு தங்க ஊஞ்சல்—அதிலே, இந்தக் காதலர்கள்— ரம்பை ,