உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சி—18

இடம்:— காட்டுப்பாதை

இருப்போர்:— பொன்னன், சின்னான்.

பொ:— டேய், சின்னான். (ஒரு நோட்டு கொடுத்து) போ, ரெண்டு நாளைக்கு இந்தப் பக்கம் இருக்க வேணாம்—தங்கவேலு உயிர் போகலையேலோ... கவனிச்சயா...

சி:— இல்லெண்ண! ஆசாமி, பரவாயில்லே, சமாளிச்சிக்கிட்டான்... வீட்டிலே, தூக்கிக்கிட்டுப் போயி போட்டிருக்கானுங்க...

பொ:— யாரு...

சி:— வழியே போனவனுங்க...

காட்சி—19

இடம்:— சம்பந்தம் வீடு.

இருப்போர்:— சம்பந்தம் அழுதபடி. தங்கவேல், கட்டுகளுடன் படுக்கையில்.

ச:— விபரீதம் நேரிடும்னு நான் பயந்தது போலவே நடந்திருக்கு... எமகாதகனாச்சே அந்த ஐயன் — இந்தக் கோலம் செய்திருக்கான் — தங்கவேலு! வேண்டாம்டா அவனோட பகைன்னு சொன்னா கேட்டானா...

(தங்கவேல் ஆயாசமாகப் பேசுகிறான்)

- த:— உயிருக்கு ஆபத்து இல்லேப்பா — பயப்படாதே — கூலி வாங்கின பேர்வழிங்கள்...கொல்லத்தான் பார்த்தா-