பக்கம்:காதல் மாயை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" . . . உன் இன்பமே என் உயிர்; உன் வாழ்வே என் வையம்; உன் கனவே என் லட்சியம். அதன் பலன் எனக்குக் காஞ்சன கிட்டி ள்ை; ரதவை நீ அடைந்தாய் ...!" கா த ல் மா ைய விமலாவின் கண்களில் இரண்டு முத்துக்கள் துளிர்த் தன; சிந்தின. இப்படிப்பட்ட ஏமாற்றம் நேருமென்று அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ரகுராமன் எழுதி யிருந்த அந்தக் கடிதத்தைத் திரும்பவும் படித்தாள். ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது; அழுகை வெடித்துப் புறப்பட்டது. தனக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் விளங் கிய ரகுராமனின் கைத்தலம் பற்றி, வாழ்க்கை வசந்தத் தில் மாங்குயிலின் தீஞ்சுவைக்கிதம் என்றும் இழைந்தோடு மென்று கனவு கண்டாள்; தான் மிஸஸ். ரகுராமனுகப் போவது தன் பாக்கியமே என்று எண்ணிப் பூரித்தாள் விமலா நாளே வரும் காதலனின் வரவு நோக்கிக் காத் திருக்கும் காதலிக்கு முதல் நாள் இரவு ஒர் இன்ப வேதனே யாகத்தானே தோற்றமளிக்கும்? அதே போலத்தான், தன் கைக்கு ரகுராமனிடமிருந்து கடிதம் கிடைக்கும்வரை விமலாவின் நிலை ஆகிவிட்டது. - 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/15&oldid=789046" இலிருந்து மீள்விக்கப்பட்டது