உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தன்புடையே யன்புடையார் தமக்கருளும் காந்தமலை மன்புடையே நல்லருளை வாங்கிடலா மென்பரதை வன்புடையேன் மறந்துழன்றேன் வடிவேல் நினையுள்ளி என்புருக வேண்டாவோ என்புருக வேண்டாவோ? மையுடைய உலகமிசை வாழ்வதிலு முயிர் மாய்த்தல் செய்வதுவே நன்றென்று சிந்தைசெய்வேன் காந்தமலை ஐயநீ யருள் கிலையே லந்தோநான் நினைநினைந்தே மெய்யுருக வேண்டாவோ மெய்யுருக வேண்டாவோ? 28. 29. மகமுறையிற் செயல்வேண்டேன் மறையோத லதும் வேண்டேன் ககமுறுபூம் பொழில்சூழ்ந்த காந்தமலை வலம்புரியின் த நகமுலவுந் திருவடியோய் நல்வேல் நினையுள்ளி யகமுருக வேண்டாவோ யகமுருக வேண்டாவோ? 30. புகழ்வேண்டேன் பிறர்பாலே புகல்வேண்டேன் உலகமெலாம் திகழ்கல்வி நலம்வேண்டேன் சீர்வேண்டேன் பொருள்வேண்டேன் முகிழ்நகிலார் சுகம்வேண்டேன் மூண்டவளக் காந்தமலை மகிழ்முருக நாயேனுன் மலியருளே பெற்றிடினே. 31. உடல்வேண்டே னுயிர்வேண்டே னுயர்நினைவு பலவேண்டேன் அடல்வேண்டேன் பிறதெய்வத் தருள்வேண்டேன் தெருள்வேண் மடல்சூழ்ந்த மலர்க்கரத்து வள்ளால்நற் காந்தமலைக் கடலனைய நின்னன்பு கவினருளைப் பெற்றிடினே. [டேன் 32. மனைவேண்டேன் ஆதனங்கள் வாகனங்க ளவைவேண்டேன் நனைமலர்த்தார் நல்லுடைகள் நாடணிக ளும்வேண்டேன் வினையறுக்கும் வேதியனே மேம்படுநற் காந்தமலை தனைவிளக்கும் விளக்கேநின் தண்ணருளே பெற்றிடினே. 38.