உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வாழ்கநின தருணங்கள் வாழ்கமுக மூவிரண்டும் வாழ்கநின நாமமென வாழ்த்துவார்க் கேயருள்செய் தாழ்கரத்தாய் காந்தமலைத் தந்தா யெளியேனைத் தாழ்கரும் வினைமீடியிற் றாங்குதலு மாகா தா எழுசீர்க் கழிநெடிலடி பாசிரிய விருத்தம். திருவளர் செய்ய தாமரை புரைநின் சீறடி யெனியனேன் மலஞ்சார் உருவுறு மனமாம் சேற்றிடை முளைக்க உரிமைகொண் டிடுதல்செய் யாவோ கருவளர் பிறப்பைக் கடிந்தெமைக காக்கக் கரத்தினிற் கதிர்கெழு சீர்த்திக் குருமணி வேல்கொள் காந்தமா மலைவாழ் குமானே யமரநா யகனே. பிறப்பினிற் பயின்று பலபவஞ் செய்த பெருமையான் பெற்றவ னாதல் சிறப்புறு நீயும் அறிகுவை கொல்லோ செவ்விள நீரெலாம் கண்டு மறப்பறி தாய குறத்தியர் தனமா மனத்தினி நினைத்தெறி யாத குறப்பழங் குடிசூழ் காந்தமா மலைவாழ் குமரனே யமரநா யகனே. கல்லையுந் துளைத்துக் கடலையும் குடித்த கதிர்மணி வேலென்றன் நெஞ்சக் கல்லையுந் துளைத்துப் பிறவியாங் கடலைக் களித்துண வெண்ணங்கொள் ளாதோ 100. 101. 102.