உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 பந்தமும் பாவும் சீருற வமைக்கும் பண்புறு நூற்றொழில் பயில்செங் குந்தர்நின் றேத்துங் காந்தமா மலைவாழ் குமரனே யமரநா யகனே. கடலிடை மரத்தைத் தடிந்தனை யென்பர் கலங்கிய பவக்கடற் குள்ளே அடலுடை மரமா யிரும்பென வமைந்த வடியனேன் மனந்தடி யாயோ கடமிசை முளைத்துக் கடனுகர் முனிவன் கைதொழும் முருகவே ளேகுக் குடமுயர் கொடியாய் காந்தமா மலைவாழ் குமரனே யமரநா யகனே. சரியையா ன்றியே னங்கைமார் மலர்க்கைச் சரியையே யறிந்திடு வேன்மெய்க் கிரியையா ன்றியே னவர்தன வி விணையாங் கிரியையே யறிந்துழல் வேனோ அரியைவா ரணங்க ளமைவொடும் பொருந்தி யன்புசெய் யதிசயம் தானங் சூரிவிரி புகழ்சேர் காந்தமா மலைவாழ் குமரனே யமரநா யகனே. உலகெலாம் புகழும் பெரியவ னீயென் றுணர்வுற வரற்குரை பகர்ந்தும் விலகலாம் படியா காதுவே டர்தம் மின்னைநீ வணங்கிய தென்னோ 109. 110. 111.