30 வாயநின் பாடல் கருத்தி னின்றியானம் வலஞ்செயல் நின்றிருக் கோயில் ஆயநின் பணியே பணியென்பார் சூழும் அழகுறு காந்தவோங் கலனே. எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம். திருமாலு மயனுமரன் றானு மாகும் 124. தெய்வமெமையாட்கொள்ளும் முருகன்கண்டாய் பெருமாலை யறவொழிக்கும் பெரியோன் கண்டாய் பீடுலவு மாறுமுக வள்ளல் கண்டாய் •ஒருமாலை மதிமுடித்தோ னிளஞ்சேய் கண்டாய் ஓமெனுநற் பொருளாகி நின்றான் கண்டாய் கருமாலை கெடக்காக்கும் கடவுள் கண்டாய் காந்தமலை வாழ்ந்தகதிர் வேலன் றானே. நினைத்தவர்க்கின் னமுதாகி நின்றான் கண்டாய் 125. நேரியநற் சமயமெல்லாந் தொழுவான் கண்டாய் தினைப்புனத்தில் வளர்வள்ளி கணவன் கண்டாய் தேவரிறை மகட்கினிய காந்தன் கண்டாய் வினைப்பயனை யூட்டுவிக்குத் தாதை கண்டாய் வேதாந்த மீதிலுறை பாதன் கண்டாய் கனைத்துலவு முகில் சூழும் பொழில்சேர் மோகைக் காந்தமலை வாழ்த்தகதிர் வேலன் றானே. 126. எவ்வுயிர்க்கு மொருதாயாய் நின்றான் கண்டாய் ஏகாந்த மோனவொளி விரிப்பான் கண்டாய் தெவ்வர்கெட வமரர்பயந் தீர்த்தான் கண்டாய் திருமுருக னெனும்பெரிய பெயரான் கண்டாய்
பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/32
Appearance