உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி விநாயகர் காப்பு வெண்பா. சீராருங் காந்தச் சிகரியிலே வீற்றிருக்கும் போராரும் வேலன் புகழ்பாட-ஏராரும் ஒற்றைவெண் கோடுடைய வும்பல் முகப்பெருமான் கற்றுணைய தாகும் நயந்து. கொச்சகக் கலிப்பா. பூவிரியுங் காலெடுத்துப் பூசைசெயே னுள்ளுருகி நாவிரியும் பாமாலை நன்கணியேன் பூவுலகிற் பாவியிவ னென்றெவரும் பன்னவிருந் தேனருளாய் காவிரிசூழ் மோகனூர்க் காந்தமலை வேலவனே. L. எண்ணார நின்னை இருத்தேன் அருந்துதிகள் பண்ணேன்நின் கோயிலெட்டிப் பாரேன் இனியிந்தப் புண்ணான நெஞ்சனுக்கும் புகலுண்டோ தேவர்கள் தம் கண்ணான தேவேகாக் காந்தமலை வேலவனே. 2. எழுத்தறியேன் சொல்லறியே னெண்ணிநினை நாவார வழுத்தறியேன் அன்பால் மனமுருகிப் பக்குவத்திற் பழுத்தறியேன் அந்தோ படுபாவி யானேனென் கழுத்தரியா வாழ்கின்றேன் காந்தமலை வேலவனே. 3.