பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.# 9

நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாமென்று மண்ருடினர். இறுதியில் வெற்றியும் பெற்றார், வழக்கு சமாதான முறையில் தீர்த்து வைக்கப்பட்டது. ரஸ்டம்ஜி உண்மையை ஒப்புக்கொண்டு அவர்கள் விதித்த தண்டத் தைச் செலுத்தினர். இவ்வழக்கின் முழு விவரங்களேயும் ஒரு தாளில் எழுதிக் கண்ணுடி போட்டுத் தம் வாணிப கிலேயத்தில் எல்லோருடைய கண்ணிலும் படும்படி மாட்டி வைக்கும்படி ரஸ்டம்ஜிக்குக் காங்தியடிகள் கூறினர். ஏனென்றால் மற்ற வாணிகர்களுக்கும் அவருடைய செயல் ஒரு எச்சரிக்கையாக இருக்குமல்லவா?

ஒரு முறை ஜோகன்ஸிஸ்பர்க் நீதிபதியின் முன்னிலே யில் காந்தியார் ஒரு வழக்கை நடத்திக் கொண்டிருந்தார். அவருடைய கட்சிக்காரர் அவரை ஏமாற்றிவிட்டதாக அப் பொழுது அவருக்குப் புலப்பட்டது. சாட்சிக் கூண்டில் குறுக்கு விசாரணையின்போது, கட்சிக்காரர் விழித்துப் போய்விட்டார். எனவே, மேற்கொண்டு வாதம் எதுவும் செய்யாமல், அவ்வழக்கைத் தள்ளிவிடும்படி காங்தியடிகள் நீதிபதியைக் கேட்டுக்கொண்டார். எதிர்த்தரப்பு வழக் கறிஞர் வியப்படைந்தார். நீதிபதி மகிழ்ச்சி கொண்டார் தம்மிடம் பொய் வழக்குக் கொண்டு வந்ததற்காகக் காத்தி யடிகள் கட்சிக்காரரைக் கண்டித்தார். அவருக்கு மாருகத் தீர்ப்பு வழங்கும்படி திேபதியைக் கேட்டுக்கொண்டார். தத்தியத்தின்பால் இவர் கொண்டிருக்க_பற்றை-அறிந்த மற்றுடவடிக்கவிஇந்திள். தாத்தியடிகளின்பால் அளவற்று

மதிப்பும் மரியாதையும் கொண்டனர்.

“வழக்கறிஞர் தொழிலில் என் கினைவுகள்’ என்ற தலைப்பில், காக்தியடிகள் தம் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ள சில செய்திகளே இங்குக் குறிப்பிட விரும்பு கிறேன். அவை பின்வருமாறு: