பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

காங்தியடிகள் இரண்டாம் முறையாகத் தென்னப் பிரிக்கா புறப்பட்டார். அவர் ஏறிச் சென்ற கோர்லாண்டு’ என்ற கப்பல் தாதா அப்துல்லா கம்பெனியாருடையது. அக் கப்பல் டர்பன் துறைமுகத்தை வந்தடைந்தது. காந்தி யார் தென்னுப்பிரிக்கா மீண்டும் வருகிறார் என்ற செய்தி எப்படியோ கேடால் வெள்ளேயர்களுக்குத் தெரிந்து விட்டது. காந்தியடிகளே எப்படியாவது டர்பனில் இறங் காமல் செய்து, இந்தியாவிற்கே திருப்பியனுப்பிவிட வேண்டும் என்ற முயற்சியில் கேடால் வெள்ளேயர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். பெரும் அளவில் கூட்டங்களும் கிளர்ச்சிகளும் நடத்தினர். தென்னுப்பிரிக்க அரசாங்கமும் அவர்களுக்கு உடங்தையாக இருந்தது. கேடால் அரசாங்க அமைச்சர் ஒருவர் வெளிப்படையாகவே இக்கிளர்ச்சிக் கூட்டங்களில் கலங்து கொண்டார்.

வெளிநாடுகளிலிருந்து டர்பன் துறைமுகத்திற்கு வரும் பிரயாணிகளே மருத்துவச் சோதனைக்கு உள்ளாக்கி, அதன் பிறகே கப்பலிலிருந்து இறங்க அநுமதிப்பது வழக்கம். மருத்துவச் சோதனை முடியும் வரை மஞ்சட் கொடியொன்று கப்பலில் பறக்கவிடப்படும். அக்கொடி கீழே இறக்கப்பட்ட பிறகுதான் உறவினர்கள் கப்பலுக் குள் சென்று, வங்தவர்களே வரவேற்க முடியும். கோர் லாண்டு கப்பலிலும், அதனேடு வந்த நாடேரி என்ற கப்பலிலும் மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டன. அவ்விரு கப்பல்களிலும் கிறைய இந்தியர்களே இருந்தனர். இவ்விரு கப்பல்களும் பம்பாயிலிருந்து புறப்படும் போது அங்கு “பிளேக்’ என்னும் தொற்று நோய் பரவியிருந்தது. “பிளேக் கிருமிகள் ஒருவருடைய உடலில் முழு வளர்ச்சி யடைவதற்கு 38 நாட்கள் ஆகும். கோர்லாண்டும். காட்டேரியும் பம்பாயை விட்டுப் புறப்பட்டுப் பதினெட்டு காட்களே ஆகின்றன. எனவே இன்னும் ஐந்து நாட்கள் கழித்தே இவ்விரு கப்பல்களும் துறைமுகத்திற்குள்