பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பர ரகுநாதன் 133 நாங்கள், மறக்கவில்லை. ஆளுல் கருங்காலித் தொழில் செய்வது ஒன்றுதான் உலகத்தில் மிகவும் கேவலமான இழிவான தொழில் என்பதையும் மகாத்மா சொல்லிக் கொடுத்திருக் கிறார்.' மறுகணமே அந்த ஊழியன் தன் கையிலிருந்த வாளியையும் அகப்பையையும் கையைவிட்டு இறக்கிக் கீழே வைத்தான். நீங்கள் போகப் போகிறீர்களா, இல்லையா ? என்று இடிக் குரலில் கர்ஜித்தார், தில்லைத் தாண்டவராயர். அவர்கள் அனைவரும் உடனே போகத்தான் செய்தார்கள். ஆளுல், முன்னணியில் நின்ற அந்தக் காங்கிரஸ் ஊழியனைப் பின்பற்றி, தம் கைகளிலிருந்த வாளி, அகப்பை, விளக்குமாறு முதலியவற்றைக் கீழே வைத்து விட்டுத்தான் போனர்கள் !