பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. எஸ். சுப்பையா 139 தடுத்துவிடத் திட்டமிட்டனர். நாகப்யா தற்செயலாகப் போவது போல பல களங்களைப்போய்ப் பார்த்தான். சங்கிலி வீட்டார் களத்தைத் தங்கள் வயலிலேயே வைத் திருந்தார்கள். நெல்லும் நெற்கதிர் கட்டுகளும், ைவ க் கோ லு ம் , வைக்கோல் போருமாகக் காட்சியளிக்கும் களத்தில், ஆடவரும் பெண்டிரும் இயல்பாக மகிழ்ச்சியோடு விளங்குவார் கள். பாடுபட்ட பலன் கிடைக்கும் சமயம் அல்லவா ? அறுவடை முடியும் வரை இரவும் பகலும் களங்களிலேயே தங்கி விடுவ தும் உண்டு. வெயிலுக்கும்-பனிக்கும் மறைவாக சிறு சிறு குடில்களை அமைத்துக்கொண்டு, அங்கேயே உண்டு உறங்கி உழைப்பதில் ஒரு தனி மகிழ்ச்சிதான். நாகய்யா களத்தை அடைந்தபோது ஆசிரியருக்கு உரிய மரியாதையோடு அவனை வரவேற்ருர்கள். சங்கிலியின் தமையன் அங்கே கிடந்த வைக்கோல் கட்டு மீது நாகய்யாவை அமரும் படி வேண்டினன். பக்கத்துக் கிராமத்துக்கு ஒரு வேலையாகத் தான் போவதாக வும், வரும் வழியில் தற்செயலாக அங்கு வந்ததாகவும் கூறிக் கொண்டு, அங்கு கள் நடமாடுகிறதா என்று நோட்டம் விட் டான். கள் வாசனை களத்து வாசனையோடு எங்கும் பரவியிருந்தது. அதிகாலையிலேயே கள் அங்கு வ்ந்துவிட்டதற்கு அறிகுறியாக கள் பானைகள், முட்டிக்கலயங்கள், சொண்டான்கள் அங்கே தென்பட்டன. சங்கிவியின் தமயன் முத்தன் அவனிடம் மிக மரியாதை யாக உரையாடினுலும், கள்குடி மயக்கத்தால் உரை குளரினன். சங்கிலி அங்கே வைக்கோற் போருக்கு அருகே நின்றுகொண் டிருந்தாள். இரண்டு மூன்று தடவைகள் அவர்கள் கண்கள் சந்தித்தன. நாகய்யா முத்தனிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து அகன்று வந்து விட்டான். அதற்குப் பின்னர் வேறு எந்தக் களத்துக்கும் போகவில்லை-போகத் தெம்பு இல்லை. சங்கிலியும் கள்குடி மயக்கத்தில் நின்றிருந்ததைக் கண்ட பாவம் தான். அவள் கண்கள் செவ்வலரி போலச் சிவந்திருந்தன. இயற்கையாக மலர விழிக்கும் மான் போன்ற மருண்ட விழிகள் எங்கே கட்குடியால் சிவந்து தன்னைப் பார்க்கக்கூசிய இந்த விழிகள் எங்கே ! இவ்வாறு நொந்து போயிருந்த அவன் உள்ளத்தில் இன் ைெரு அடி வீழ்ந்தது உடனடியாக அவளைப்போலவே களத்து